நூடுல்ஸ்

ஏ. ஆர். ரகுமான் நேற்று 2 கிராமி விருதுகளை வாங்கிய செய்தி கேட்டு மகிழ்வடைந்தேன், மனுஷனுக்கு “ஸ்லம்டோக் மில்லியனர்” எத்தனை விருதுகளை வாங்கி கொடுத்து விட்டது? சென்ற வருடம் வாங்கி குவித்த விருதுகளுக்கு மேலதிகமாக இந்த வருடமும் கிராமி விருதுகளை வாங்குவதன் மூலம் இந்த வருடத்திற்கான விருது கணக்கையும் தொடக்கி வைத்து விட்டார், மேலும் இந்திய அரசு இந்த வருடம் பத்மபூஷண் விருது வழங்கி இவரையும், மேஸ்ட்ரோ இளையராஜாவையும் கௌரவித்துள்ளது.


எத்தனை எத்தனை விருதுகள் வந்தாலும் மனுஷன் என்ன ஒரு அடக்கமாக இருக்கிறார், இதற்குதான் “நிறைகுடம் என்றைக்கும் தளம்பாது” என முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்களோ?


====================================================

“தமிழ் படம்” படம் பற்றிய விளம்பரங்கள், இணைய பதிவுகள் ரொம்ப நல்லாயிருக்கு படம் பார்க்க ஆசையை தூண்டியிருக்கிறது, ஆனாலும் படம் கிட்டிய எந்த தியேட்டர்களிலம் வெளியாகவில்லை. எத்தனையோ மொக்கை படங்களை முதல் நாளே வெளியிடும் தியேட்டர்கள் ஏனோ இந்த படத்தை வெளியிடவில்லை?


ஏற்கனவே இவ்வகையான ஆங்கில படங்களான ஸ்கேரி மூவியின் பல பாகங்கள், ஹொட் ஷொட் 1 மற்றும் 2 பார்த்து வயிறு குழுங்க சிரித்திருக்கிறேன், இன்றும் ஹொட்ஷொட் 2 அடிக்கடி நண்பர்களோடு பார்த்து ரசிப்போம்.


====================================================

கிரிக்கட்டில் அவுஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணியை மொங்கு மொங்கென்று மொங்கிவிட்டது, அதிலும் கடைசிப் போட்டியில் அப்ரிடி பந்தை கடித்து தன் மீதிருந்த நல்ல பெயரை கெடுத்து கொண்டார், சர்வதேச ரீதியில் நான் மதித்திருந்த முக்கிய இரண்டு வீரர்களான அப்ரிடி மற்றும் ஷேவாக் இருவரும் பல ரசிகர்கள் அவர்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையை கெடுத்து கொண்டனர், இருவரும் நல்ல அதி திறமையான வீரர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் ஜென்டில்மேன் கிரிக்கட்டர்களா என கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.


====================================================

தமிழ் மொழியின் சக்தி என கூறிக் கொள்ளும் இலங்கையின் முன்னனி வானொலிகளில் ஒன்று இப்போது தமிழ் மொழியை டமில் மொழியாக உச்சரித்து அதன் ரசிகர்களை இழந்து வருகிறது. ஒரு காலத்தில் எழில் வேந்தன் அண்ணா, லோஷன், செந்தூரன், ராம்பிரஸன் போன்றவர்களது அழகு தமிழுக்காக அந்த வானொலியை 24 மணிநேரமும் கேட்டிருக்கிறேன்,ஆனால் இன்று இந்திய தொலைக்காட்சி அறிவிப்பாளர்களைபோல் (இந்திய அறிவிப்பாளர்கள்தான் இங்கு வேலை செய்வதாக கேள்வி) டமில் பேசி எங்களை நேயர்களை கொல்கிறார்கள், முன்னர் அழகாக தமிழ் பேசிய ஒரு அறிவிப்பாளினியும் இப்போதெல்லாம் இந்திய தொலைக்காட்சி சாயிலில் வானொலியில் பேசுகிறார்,


சக்தியில் ஏனிந்த மாற்றம்? இலங்கையில் திறமை வாய்ந்த அறிவிப்பாளர்கள் இல்லையா?


====================================================

ரோட்டோரக்கடையில் வாங்கிய விண்டோஸ் எக்ஸ் பீயை பாவித்து வந்த நான் உபுண்டு லினக்சுக்கு மாறி பார்த்தேன், பிரமிக்கத்தக்க மாற்றம், விண்டோசை விட அதிக வேகம், இணைய வேகம் சிறப்பாக இருக்கிறது, சகலவிதமான ஹார்ட்வெயார்களுக்கும் ஆதரவு தருகிறது, உபுண்டு லினக்ஸ் இவ்வளவு சிறப்பாக இருக்குமென நினைத்து பார்க்கவேயில்லை. ஆரம்பத்தில் வீடியோ பார்க்க, எம்பீ3 கேட்க சிறிது சிரமப்பட்டேன், இப்போது அதுவும் சரியாகிவிட்டது.


எனக்கு இந்த இயங்கு தளத்தில் உள்ள ஒரே பிரச்சினை தமிழ் யுனிக் கோட் தட்டச்சு செய்வது தான், காரணம் நான் தமிழில் தட்டச்சுவது பாமினி எழுத்துருவிற்கு அமைவாக என்பதால் சிறிய பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது.


அதற்கு தீர்வாக பதிவர் சயந்தன் பதிவர் மு.மயுரனை தொடர்பு கொள்ள சொன்னார், அவரும் பாமினி எழுத்துருவை கொண்டு தட்டச்ச சில வழிகளை சொல்லித்தந்தார், லினக்சில் நான் இன்னும் கத்துக்குட்டியாக இருப்பதால் அதை முழுமையாக நிறுவ இயலவில்லை, எனினும் லினக்ஸ் எனக்கு மிகவும் இனிமையாக இருக்கிறது.


18 Responses
  1. //“தமிழ் படம்” படம் பற்றிய விளம்பரங்கள், இணைய பதிவுகள் ரொம்ப நல்லாயிருக்கு படம் பார்க்க ஆசையை தூண்டியிருக்கிறது, ஆனாலும் படம் கிட்டிய எந்த தியேட்டர்களிலம் வெளியாகவில்லை. எத்தனையோ மொக்கை படங்களை முதல் நாளே வெளியிடும் தியேட்டர்கள் ஏனோ இந்த படத்தை வெளியிடவில்லை? //


    why blood? same blood.hi hi....



  2. ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்.மனுசன் கலக்குகிறார்.
    நிறைகுடமே தான்....

    தமிழ்படம் இங்கும் வரவில்லை என்று நினைக்கிறேன்.
    வேறென்ன, தரவிறக்கம் தான்.
    (இன்னும் அங்கும் வரவில்லை என்று நம்புகிறேன்)


    அப்ரிடியை இயலுமானளவு போட்டுத்தாக்கியாயிற்று....
    நான் நல்ல மனிதர் என்று நம்பிய வீரர், ஒரே நாளில் சேவலமாக நடந்து கொண்டார்.
    பிழையை செய்தபின்னர் அவர் முதலில் அளித்த பேட்டியில் இப்படிச் சொன்னாராம்,
    'No I was just trying to smell it, how it is feeling'
    கொழுப்பு என்பார்களே, அது இதுதானே?


    சக்தி!
    கதைத்துக் களைத்தாயிற்று....

    நானும் மாறலாம் என்று பார்க்கிறேன், பார்ப்போம்....


  3. Bavan Says:

    //“நிறைகுடம் என்றைக்கும் தளம்பாது”//

    இசைப்புயலுக்கு வாழ்த்துக்கள்...;)

    //எத்தனையோ மொக்கை படங்களை முதல் நாளே வெளியிடும் தியேட்டர்கள் ஏனோ இந்த படத்தை வெளியிடவில்லை?//

    உங்கள் ஆதங்கம்தான் எனக்கும், கட்டாயம் பார்க்கவேணும்..;)

    //அப்ரிடி மற்றும் ஷேவாக் இருவரும் பல ரசிகர்கள் அவர்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையை கெடுத்து கொண்டனர்//

    சேவாக், அப்ரிடி இரண்டு பேருக்கும் ஒரு ஒற்றுமை பாருங்கள் இரண்டு பேருமே கெட்டது வாயாலே..ஹீஹீ

    //சக்தியில் ஏனிந்த மாற்றம்? இலங்கையில் திறமை வாய்ந்த அறிவிப்பாளர்கள் இல்லையா?/

    என்ன செய்யிறது, இலங்கையில்தான் சுத்தத்தமிழ் இருக்கு என்கிறார்கள் இப்ப அதுவும் இல்லையோ?


  4. KANA VARO Says:

    டைம் பிரச்சனைல நூட்லஸ் தான் வருதோ.. பரவாஜில்ல தொடர்ந்து எழுதவும். பல பதிவர்கள் ஒதுங்கி கொண்டார்களோ தெரியவில்லை. பதிவுகளை காண முடியவில்லை.

    //சக்தி!
    கதைத்துக் களைத்தாயிற்று....//

    அ தி மு க பற்றி நாம் என்ன கதைக்க இருக்கு. ? விட்டிடுவம்.

    யானை தன்ற தலையில ...!!!!!!!!!!


  5. “நிறைகுடம் என்றைக்கும் தளம்பாது”
    உண்மையிலும் உண்மை இசைப்புயலுக்கு வாழ்த்துக்கள்

    “தமிழ் படம்”
    பார்க்கலாம்

    //ஜென்டில்மேன் கிரிக்கட்டர்களா//
    நல்ல கேள்வி தான்

    //இலங்கையில் திறமை வாய்ந்த அறிவிப்பாளர்கள் இல்லையா?//
    ஒரு குறித்த இடத்தில் நடக்கும் குறைகளை சுட்டிக்காட்ட இப்படி ஒரு கேள்வியா? சிறந்த அறிவிப்பாளர்கள் இருக்கத்தான் செயகின்றார்கள் அவர்களைக் கண்டு கொள்வது தான் அரிதாகியுள்ளது

    Noodles super


  6. Subankan Says:

    ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்.

    தமிழ்படம் - தரவிறக்குவதைத் தவிர வேறு வழியில்லை


    அப்ரிடி - என்னத்தைச் சொல்ல?


    சக்தி - கைவிட்டாச்சு

    உபுண்டு - நானும் பாவித்திருக்கிறேன்


  7. @ எப்பூடி

    சொல்லவேயில்லை...


  8. @ ஜெட்லி

    தல வருகைக்கு நன்றிகள்


  9. @ கனககோபி

    பழைய கோபியின் நகைச்சுவை பதிவுகள் எங்கே? ஒரு ரசிகனாய் அதை எதிர்பார்த்திருக்கிறேன்


  10. @ Bavan

    சேவாக், அப்ரிடி இருவரையும் தான் நீங்கள் கிழி கிழி என கிழித்து விட்டீர்களே


  11. @ VARO

    நான் ஒதுங்கவில்லை, சற்று வேலைப்பழு அதிகம், அதனால்தான் எழுதுவது குறைந்து விட்டது.

    அ.தி.மு.க வா? ஐயா நான் அரசியல் எழுதமாட்டேனே...


  12. @ ஜோ.சம்யுக்தா கீர்த்தி

    அம்மா தாயே வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி


  13. @ Subankan

    ஆமாம் ஏன் ஐந்தறைப்பெட்டி கொஞ்ச நாளாக அமைதியாக இருக்கிறது? பரீட்சையோ?


  14. // பழைய கோபியின் நகைச்சுவை பதிவுகள் எங்கே? ஒரு ரசிகனாய் அதை எதிர்பார்த்திருக்கிறேன் //

    என்னண்ணே இரசிகர் அது இது எண்டு பெரிய வார்த்தையெல்லாம்....

    கொஞ்சம் form ஐ இழந்து தடுமாறுகிறேன்...
    எழுத முயற்சிக்கிறேன்...
    ஆதரவுக்கு நன்றி யோ அண்ணா.... :)


  15. balavasakan Says:

    ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு தெரிந்து ஒரே ஒரு கடவுள் ....


  16. ரஹ்மான் பாராட்டப்பட வேண்டியவர்.

    நன்றாகச் சொன்னீர்கள்."டமில்" அல(ழ)காக பேசுகிறார்கள்.


  17. சிம்பிள் பட் ஸ்வீட் நூடில்ஸ்.. நானும் தமிழ் படம் போடததையிட்டு எரிச்ச லடைந்துள்ளேன்.. கோவாவைப்போட்டு வாந்தியெடுக்க வைத்த நேரம் தமிழ்படத்தை எடுததததிருக்கலாம் ஈரோஸ் காரர்.. :(