நூடுல்ஸ் (04-11-2009)

இருக்கிறம் சஞ்சிகை ஏற்பாடு பண்ணிய சந்திப்பை என் போன்ற பலர் பதிவர் சந்திப்பென்று நினைத்து சென்று கொஞ்சம் ஏமாற்றமடைந்து திரும்பினோம். முதலாவது பதிவர் சந்திப்பு முடிவடைந்த பின்னர் மனதில் ஏற்பட்ட ஆனந்தமே இம்முறை எம்மை அந்நிகழ்வுக்கு எடுத்து சென்றது என்பது மறுக்கவியலாத உண்மை. 


இருக்கிறம் தனது இருப்பை வெளிகாட்ட ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுக்காக விடுமுறை தினத்திலே கிட்டத்தட்ட 400 கிலோமீற்றர் பயணம் மேற்கொண்டேன். காலை 7 மணிக்கு பயணிக்க தொடங்கிய நான் இரவு 10.45 மணியளவில் எனது அறையை வந்தடைந்தேன். சில ஏமாற்றங்களை தந்தாலும் முகம் தெரியா பதிவர்கள் பலரை நேரில் கண்டு பேச கிடைத்த வாய்ப்பு கிடைத்ததை மறுக்க இயலாது. முதலாவது பதிவர் சந்திப்பில் அறிமுகமான வந்தி, லோஷன், ஆதிரை போன்றோரையும். அந்நிகழ்வில் முகமறிந்த மன்னார் அமுதன், மருதமூரான், கௌபோய் மது, சுபானு போன்றோரை கண்டு கதைக்க கிடைத்தது. மேலும் கீர்த்தி, நாச்சியாதீவு பர்வீன் (பெயர் சரி என நினைக்கிறேன்), இறக்குவானை நிர்ஷன், கனககோபி, சுபாங்கன், அருண்பிரசாத், சந்ரு, வரோ, பண்டாரவளை புனாகலையிலிருந்து ஒரு நண்பர் இன்னும் பல நண்பர்களை (பலரது பெயர்கள் நினைவுக்கு வரவில்லை மன்னிக்கவும்) சந்திக்க கிடைத்தது. இவர்களது நட்பு கிடைத்ததையிட்டு மகிழ்வடைகிறேன்.


======================================================
நேற்று அப்ரிடி நியுசிலாந்தோடு விளையாடிய ஒரு நாள் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மனுஷன் நேற்று போல் பொறுப்பாக விளையாண்டால் அவரை அடிக்க ஆளே கிடையாது. ஒரு காலத்தில் நான் அப்ரிடியின் அதிரடிக்காக தொடர்ந்து பாகிஸ்தான் விளையாடுவதை பார்த்திருக்கிறேன். கம்ரான் அக்மலும் எந்த இடத்தில் விளையாண்டாலும் கலக்குறார். 


அவுஸ்திரேலியா அணியில் எத்தனை பேருக்கு காயம் வந்தாலும் புதிதாக வரும் வீரர்கள் கலக்குகிறார்கள். என்னதான் அடிவாங்கினாலும் சிங்கம் சிங்கம்தான். சச்சின், தோனி இல்லாத இந்திய அணியும் சங்கக்கார, தில்ஷான், மகேல இல்லாத இலங்கை அணியும் நினைத்தே பார்க்க முடியாது, ஆனால் அவுஸ்திரேலியா புதிதாக அணிக்குள் கொண்டு வரும் அனைவரும் சீனியர் வீரரை போல் ஆடுகின்றனர். இது அவர்களது உள்நாட்டு விளையாட்டு கட்டமைப்பு எவ்வளவு உறுதியானது என காட்டுகிறது. 


மேற்கிந்திய அணி கிறிஸ் கெயிலின் தலைமையில் அவுஸ்திரேலியாவை எதிர்க்க போகிறது வரவேற்க படவேண்டிய ஒன்று. இவ் அணி தாங்கள் முன்வைத்த கொடுப்பனவுக்கு தகுதியானவர்கள்தான் என இத்தொடரில் நிருபிக்க வேண்டியிருக்கிறது.


======================================================
பதிவர் சந்திப்புக்கு சென்று திரும்புகையில் இன்னொரு விடயம் நடந்தது. பஸ்ஸில் எனது பக்கத்தில் ஒரு இளம் பெண் அமர்ந்திருந்தாள். நானும் பொழுது போகாவிடின் அவளுடன் கடலை போடலாம் என நம்பி (வடிவேலு மாதிரி வாசிக்க வேண்டும்) இருந்தால் பஸ் பயணத்தை தொடங்கி சிறிது நேரத்தில் அவள் நன்றாக தூங்கிவிட்டாள். அப்படியே நானும் தூங்கிவிட்டேன் கேகாலை நகருக்கு அண்மையில் பஸ் போய் கொண்டிருக்கையில் நான் விழித்து கொண்டேன். எனது தோளில் சாய்ந்து யாரோ தூங்கி கொண்டிருந்தார்கள். அப்புறம் பார்த்தால் அந்த பெண் ஏதொ ரொம்பவே நெருங்கியவருடைய தோளில் தூங்குவது போல் எனது தோளில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். எனக்கு எழுப்புவோமா, வேண்டாமா என யோசனை கடைசியில் எழுப்பவில்லை. கடைசியில் பேராதனை வரும் போது அவள் முழித்து கொண்டாள். எனது தோளில் தூங்கியதை கண்டு மன்னிப்பு கேட்டாள். நானும் பெரிய மனிதர் போல் மன்னித்து விட்டேன். கண்டியை பஸ் நெருங்குகையில் அவள் பஸ்ஸை விட்டு இறங்கி விட்டாள்.


"அடடா வடை போச்சே...”


======================================================
போன வாரம் ”வடை போச்சே ” என லோஷன் கூறிய கவிதை பலருக்கும் பிடித்தமானதால் இவ்வாரம் எனது நண்பனொருவன் நடுராத்திரியில் என்னை எழுப்பி அலைபேசிய கவிதை


“பன்றிக்கு நன்றி சொல்லி
குன்றின் மேல் ஏறி நின்றால்
வென்றிடலாம்
பன்றிக் காய்ச்சலை”

======================================================


விஜய் படம் போட்டால் “இருக்கிறம்” சஞ்சிகை நன்றாக விற்பனையாகிறதாக அச்சுவலை சந்திப்பில் அச்சஞ்சிகை சார்பில் சொல்லப்பட்டது. நானும் ஒரு விஜய் படம் போடுகிறேன் பார்க்போம் இந்த பதிவுக்கு அதிக வாக்குகள் கிட்டுகிறதா என???????







அகில உலக பச்சிளம் பாலகர் சங்கம்

எமது பதிவர்களில் பலர் பச்சிளம் பாலகர்களாக இருப்பதால் (முக்கியமாக வந்தியத்தேவன்) அவர்களது பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதாக அறிந்து கொண்டன் பயனாக அவர்களுக்கென்று ஒரு சங்கம் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அகில உலக பச்சிளம் பாலகர் சங்கம் நேற்று தனது சங்கத்தை பதிவு செய்து கொண்டது. அடுத்த கட்டமாக இன்று அதன் நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளது. நிர்வாக குழுவுக்கு விண்ணப்பிப்பவர்கள் (மூத்த பதிவர் வந்தி உட்பட) இங்கு கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பப்படிவதை நிரப்பி பின்னூட்டமிடுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றார்கள்.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் பதவிகள் தலைவர், செயலாளர், கொ.ப.செ, உப தலைவர், நிர்வாக குழு உறுப்பினர்கள். (பொருளாளர் பதவி எனக்கு ஏக மனதாக வழங்கப்பட்டுவிட்டது என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.)

அகில உலக பச்சிளம் பாலகர் சங்கம்
விண்ணப்பப்படிவம்
பெயர் -..................................................................................................................
செல்லப்பெயர் - ..............................................................................................
பச்சிளம் பாலகராக இருக்கும் காலம் - ..............................................................
பச்சிளம் பாலகனாக இருந்த காலத்தில் சாதித்தது - ...............................................
பச்சிளம் பாலகனாக கிடைத்த அனுபவங்கள் - ..............................................................
வேறு யாராவது ஒருத்தரை பச்சிளம் பாலகனாக சிபாரிசு செய்கிறீர்களா? ஆம் எனில் அவரது பெயர் - ..............................................................
சங்கத்தில் எதிர்பார்க்கும் பதவி-..............................................................


பி.கு.  வந்தியை நேற்று சந்திப்பில் பார்த்த பின்னரே பச்சிளம் பாலகர் என்பவர் எப்படியிருப்பார் என அறிந்து கொள்ள கூடியதாக இருந்தது. 


பி.பி.கு. பச்சிளம் பாலகர் சங்கத்துக்கு இலட்சினை ஒன்றை யாராவது சிபாரிசு செய்யலாம்.