அகில உலக பச்சிளம் பாலகர் சங்கம்
எமது பதிவர்களில் பலர் பச்சிளம் பாலகர்களாக இருப்பதால் (முக்கியமாக வந்தியத்தேவன்) அவர்களது பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதாக அறிந்து கொண்டன் பயனாக அவர்களுக்கென்று ஒரு சங்கம் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அகில உலக பச்சிளம் பாலகர் சங்கம் நேற்று தனது சங்கத்தை பதிவு செய்து கொண்டது. அடுத்த கட்டமாக இன்று அதன் நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளது. நிர்வாக குழுவுக்கு விண்ணப்பிப்பவர்கள் (மூத்த பதிவர் வந்தி உட்பட) இங்கு கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பப்படிவதை நிரப்பி பின்னூட்டமிடுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றார்கள்.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் பதவிகள் தலைவர், செயலாளர், கொ.ப.செ, உப தலைவர், நிர்வாக குழு உறுப்பினர்கள். (பொருளாளர் பதவி எனக்கு ஏக மனதாக வழங்கப்பட்டுவிட்டது என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.)
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் பதவிகள் தலைவர், செயலாளர், கொ.ப.செ, உப தலைவர், நிர்வாக குழு உறுப்பினர்கள். (பொருளாளர் பதவி எனக்கு ஏக மனதாக வழங்கப்பட்டுவிட்டது என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.)
அகில உலக பச்சிளம் பாலகர் சங்கம்
விண்ணப்பப்படிவம்
பெயர் -..................................................................................................................
செல்லப்பெயர் - ..............................................................................................
பச்சிளம் பாலகராக இருக்கும் காலம் - ..............................................................
பச்சிளம் பாலகனாக இருந்த காலத்தில் சாதித்தது - ...............................................
பச்சிளம் பாலகனாக கிடைத்த அனுபவங்கள் - ..............................................................
வேறு யாராவது ஒருத்தரை பச்சிளம் பாலகனாக சிபாரிசு செய்கிறீர்களா? ஆம் எனில் அவரது பெயர் - ..............................................................
சங்கத்தில் எதிர்பார்க்கும் பதவி-..............................................................
பி.கு. வந்தியை நேற்று சந்திப்பில் பார்த்த பின்னரே பச்சிளம் பாலகர் என்பவர் எப்படியிருப்பார் என அறிந்து கொள்ள கூடியதாக இருந்தது.
பி.பி.கு. பச்சிளம் பாலகர் சங்கத்துக்கு இலட்சினை ஒன்றை யாராவது சிபாரிசு செய்யலாம்.