பதிவர்களின் காதலர் தினம் - பகுதி 2
சென்ற வாரம் நான் எழுதிய (கிறுக்கிய) காதலர்களின் காதலர் தின கொண்டாட்டங்கள் பற்றிய “டணால்” அறிக்கையின் தொடர்ச்சி......
பதிவர் லோஷன்
இந்த வருட காதலர் தினத்தை பல காதலிகளோடு கொண்டாடிய பிரபல மூத்த பதிவர் லோஷன் அவர்கள் இரவு வீடு செல்ல நேரமாகியது, நேரம் சென்று வீட்டுக்கு வந்த லோஷனை அண்ணி “ஏன் லேட்?” என கேட்க , அதற்கு வெற்றி எப்.எம் இரண்டாவது வருட புர்த்தி கொண்டாட்டங்களில் நேரம் போய்விட்டதாக பொய் சொல்லி சமாளித்தாகவும் பட்சி கூறுகிறது.
கடந்த முறை 3 காதலிகளுடன் காதலர் தினத்தை கொண்டாடிய லோஷன் இம்முறை 5 காதலிகளுடன் காதலர் தினத்தை கொண்டாடியதாகவும் பட்சி சொல்லியது
பதிவர் புல்லட்
காதலர் தினத்தில் காதலி கிடைக்காத சோகத்தில் மனுஷன் கோவா படத்தை பார்த்து விட்டு நண்பரொருவருடன் முழு நாளும் கோல்பேசில் நேரத்தை போக்கியதாக தகவல். கலகல பார்ட்டியான மனுஷன் காதலி கிடைக்காத சோகத்தில் இப்போவெல்லாம் சீரியஸ் பதிவிடுவது அனைவரும் அறிந்ததே.
மனுஷன் கோவா படம் பார்த்ததும், முன் வீட்டு நாணிப்பாட்டி புல்லட்டை காதலர்தினத்தன்று தேடியதும், நண்பரோடு பொழுதை போக்கியதும் ஒன்றுடனொன்று தொடர்பில்லாத விடயங்கள் என பட்சி கூறுகிறது.
பதிவர் வரோ
நட்சத்திர கலை விழா பதிவை சிறப்பாக எழுதி பதிவிட்டு தூங்கிய மனுஷன் காதலர் தினத்தன்று முழித்து பார்க்கும் போது கட்டிலை சுற்றி பல இளம் பெண்கள் இவருக்காக காதலர் தின அட்டைகளை நீட்டி கொண்டிருந்ததை கண்ட வரோ சந்தோஷம் தாளாமல் ஒரு பெண்ணை தெரிவு செய்து இவளை நாம் காதலியாக்கி கொள்ளுவோம் என நினைத்து அவளது காதலர் தின அட்டையை வாங்க கை நீட்டினார்.படார் என சத்தம்
என்னவென்று பார்த்தால் இவ்வளவு நேரமும் கனவு கண்ட மனுஷன் காதலியை நோக்கி கை நீட்ட எத்தனித்ததில் கட்டிலில் தூங்கியவர் கீழே விழுந்து கால் சுளுக்கி கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதிவர் பங்குச்சந்தை அச்சு
பங்குசந்தை பற்றி எழுதும் பதிவர் காதலி தேடி இலங்கைக்கும் மலேசியாவுக்கும் பறந்து பறந்து ஒருவாறு காதலி ஒருத்தியை தேடி கண்டுபிடித்து இருவரும் தாறுமாறாக காதலிக்க தொடங்கினர். பெரிய வியாபாரியான அப்பெண்ணுக்கும் நம்ம பதிவருக்கும் இடையில் ஏதொ ஒரு நிறுவன பங்குகளை வாங்குவதில் ஏற்பட்ட முறுகலில் கடந்த ஒரு வாரமாக இருவருக்கிடையிலான பேச்சுக்கள் ரத்து. காதலியுடன் மௌன மொழியில் கதைத்து காதலர் தினத்தை கொண்டாடிய நம்ம பதிவர் இப்போதெல்லாம் வாயில் முணு முணுக்கும் பாட்டு வரி
“நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா கவலைப்படாதே கண்ணா கவலைப்படாதே”
இப்பாடலை இவர் கன்கொனுக்கு ஆதரவாக பாடுவதாக கன்கொன் கோபி நினைத்திருக்கிறார். உண்மையில் இது அவரே அவருக்காக பாடும் பாடலாகும்.
பதிவர் ஆதிரை
படம் காட்டும் பதிவரான (பதிவுலகில் சொல்கிறேன்) இவர் காதலர் தின கொண்டாட்டத்தை வேலைத்தளத்தில் காதலிகளுடன் விமர்சையாக கொண்டாடி விட்டு கிடைத்த பரிசுப் பொருட்களை யாருக்கும் காட்டாமல் ஒளித்து வைத்துள்ளதாகவும் அந்த பரிசு பொருட்களை கொண்டு செல்ல “கன்டெயினர் ” ஒன்றை தேடுவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
பதிவர் கௌபோய் மது
மஜா பதிவர் என்றழைக்கப்படும் பதிவர் மது காதலர் தினத்தன்று மிஸ்ஸிங் இவரை பற்றி தகவல் சேகரிக்க சென்ற எமது குழுவும் மிஸ்ஸிங்.
யாராவது இவங்களை கண்டால் பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க
இப்பதிவு சிரிப்பதற்கு மாத்திரமே என்பதை கூறிக்கொண்டு, இந்த மொக்கை பதிவின் இரண்டாம் பாகத்தை எழுத சொல்லி டிவிட்டிய அனுதினனுக்கு நன்றி சொல்கிறேன். இவரை பற்றி அதிகம் தெரியாததால் இவரது கொண்டாட்டம் பற்றி எழுத முடியவில்லை, அனுதினனை பற்றி நன்றாக தெரிந்த யாராவது பின்னூட்டத்தில் இவரது காதலர் தின கொண்டாட்டத்தை பற்றி எழுதவும்