Showing posts with label இலங்கை பதிவர்கள். Show all posts
Showing posts with label இலங்கை பதிவர்கள். Show all posts

இலங்கை பதிவர்களை காணவில்லை

தொடர்ந்து பதிவுகள் எழுதிய இலங்கை பதிவர்கள் பலரை கடந்த சில நாட்களாக காணவில்லை. இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. தொடர்ந்து எழுதும் ஒரு சிலரை தவிர மற்றவர்களும் ஏதோ ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கொரு தடவையும் எழுதுகின்றனர். 

“என்ன கொடுமை சார்” சொல்வதை போல் யாரையும் எழுத நிர்பந்திக்க முடியாவிடினும் பதிவுலகத்தை விட்டு கொஞ்ச காலம் விலகியிருக்க எண்ணியிருந்தால், அந்த கொஞ்ச காலம் கொஞ்ச கொஞ்சமாக அதிகரித்து, பதிவெழுதும் எண்ணமே கைவிட்டு போய்விடலாம் என்ற அனுபவம் தனிப்பட்ட அனுபவம் இருக்கிறது. 

எல்லா பதிவர்களும் இப்படி யோசித்து ஒதுங்கியிருந்தால், பல பதிவர்களை நாம் இழக்கவேண்டியிருக்குமோ என்னும் பயம் எனக்கு வந்துள்ளது. சமீபத்தில் இலங்கை பதிவர்கள் நல்ல போர்மில் இருந்த கால கட்டமாக நான் நினைப்பது, பதிவர் சந்திப்புகளிற்கு முன்னரும், பின்னருமான கால கட்டங்களாகும். 

பதிவர்கள் சிலரோடு கதைத்த போது இன்னுமொரு சந்திப்பு இருந்தால் நன்றாக இருக்குமென அவர்களும் நினைக்கிறது புரிகிறது. ஆக மீண்டும் ஒரு பதிவர் சந்திப்புக்கு யாராவது ஏற்பாடு செய்தால், இழந்த போர்மை பலரும் பெறலாம் என நினைக்கிறேன், ஆனால் “பூனைக்கு யார் மணி கட்டுவது?”. யாராவது ஒரு பதிவர் தொடங்கி வைத்தால் நன்றாக இருக்குமென நினைக்கிறேன். யாராவது ஒரு பதிவர் முன்வரலாம். முன் வந்தால் ஏற்கனவே சந்திப்புகளை ஏற்பாடு செய்த குழு அவர்களுக்கு உதவுமென நினைக்கிறேன்.

முன்னைய இரண்டு சந்திப்புகளையும் தொடர்புபடுத்திய பதிவர் வந்தியத்தேவன் இப்போது இலங்கையில் இல்லாமையினால் அந்த தொடர்புபடுத்தும் பொறுப்பை சின்ன வந்தி விரும்பினால் செய்யலாம் என நினைக்கிறேன். கோபியை நான் ஏற்பாடு செய்ய சொல்லவில்லை, தொடர்புபடுத்த (Coordinator) விரும்பினால் நல்லாயிருக்குமென நினைக்கிறேன். நான் இணைந்து சந்திப்பை ஏற்பாடு செய்ய விரும்பினாலும் நான் இருப்பது கண்டியில் என்பதாலும் அதிகமான பதிவர்கள் கொழும்பிலிருப்பதாலும் அது சாத்தியமில்லை என நினைக்கிறேன்.

இப்போதைக்கு சந்திப்பு நடாத்த இயலாவிட்டாலும், இரண்டாவது சந்திப்பில் கௌபோய் மது சொல்லியபடி “கூகுல் குழும அரட்டையில்”   ஒரு சந்திப்பை நிகழ்த்தலாம் என நினைக்கிறேன். 

யாராவது ஏற்பாடு செய்யுங்களேன், சந்திப்போம்.

பி.கு. - இன்று பிறந்த நாளை கொண்டாடும் மூத்த பதிவர் கவிஞர் மேமன் கவி ஐயா அவர்களுக்கு எனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்



பதிவர்களின் காதலர் தினம் - பகுதி 2

சென்ற வாரம் நான் எழுதிய (கிறுக்கிய) காதலர்களின் காதலர் தின கொண்டாட்டங்கள் பற்றிய “டணால்” அறிக்கையின் தொடர்ச்சி......


பதிவர் லோஷன்
இந்த வருட காதலர் தினத்தை பல காதலிகளோடு கொண்டாடிய பிரபல மூத்த பதிவர் லோஷன் அவர்கள் இரவு வீடு செல்ல நேரமாகியது, நேரம் சென்று வீட்டுக்கு வந்த லோஷனை அண்ணி “ஏன் லேட்?” என கேட்க , அதற்கு வெற்றி எப்.எம் இரண்டாவது வருட புர்த்தி கொண்டாட்டங்களில் நேரம் போய்விட்டதாக பொய் சொல்லி சமாளித்தாகவும் பட்சி கூறுகிறது.


கடந்த முறை 3 காதலிகளுடன் காதலர் தினத்தை கொண்டாடிய லோஷன் இம்முறை 5 காதலிகளுடன் காதலர் தினத்தை கொண்டாடியதாகவும் பட்சி சொல்லியது


பதிவர் புல்லட்
காதலர் தினத்தில் காதலி கிடைக்காத சோகத்தில் மனுஷன் கோவா படத்தை பார்த்து விட்டு நண்பரொருவருடன் முழு நாளும் கோல்பேசில் நேரத்தை போக்கியதாக தகவல். கலகல பார்ட்டியான மனுஷன் காதலி கிடைக்காத சோகத்தில் இப்போவெல்லாம் சீரியஸ் பதிவிடுவது அனைவரும் அறிந்ததே. 


மனுஷன் கோவா படம் பார்த்ததும், முன் வீட்டு நாணிப்பாட்டி புல்லட்டை காதலர்தினத்தன்று தேடியதும், நண்பரோடு பொழுதை போக்கியதும் ஒன்றுடனொன்று தொடர்பில்லாத விடயங்கள் என பட்சி கூறுகிறது.


பதிவர் வரோ
நட்சத்திர கலை விழா பதிவை சிறப்பாக எழுதி பதிவிட்டு தூங்கிய மனுஷன் காதலர் தினத்தன்று முழித்து பார்க்கும் போது கட்டிலை சுற்றி பல இளம் பெண்கள் இவருக்காக காதலர் தின அட்டைகளை நீட்டி கொண்டிருந்ததை கண்ட வரோ சந்தோஷம் தாளாமல் ஒரு பெண்ணை தெரிவு செய்து இவளை நாம் காதலியாக்கி கொள்ளுவோம் என நினைத்து அவளது காதலர் தின அட்டையை வாங்க கை நீட்டினார்.படார் என சத்தம் 


என்னவென்று பார்த்தால் இவ்வளவு நேரமும் கனவு கண்ட மனுஷன் காதலியை நோக்கி கை நீட்ட எத்தனித்ததில் கட்டிலில் தூங்கியவர் கீழே விழுந்து கால் சுளுக்கி கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பதிவர் பங்குச்சந்தை அச்சு


பங்குசந்தை பற்றி எழுதும் பதிவர் காதலி தேடி இலங்கைக்கும் மலேசியாவுக்கும் பறந்து பறந்து ஒருவாறு காதலி ஒருத்தியை தேடி கண்டுபிடித்து இருவரும் தாறுமாறாக காதலிக்க தொடங்கினர். பெரிய வியாபாரியான அப்பெண்ணுக்கும் நம்ம பதிவருக்கும் இடையில் ஏதொ ஒரு நிறுவன பங்குகளை வாங்குவதில் ஏற்பட்ட முறுகலில் கடந்த ஒரு வாரமாக இருவருக்கிடையிலான பேச்சுக்கள் ரத்து.  காதலியுடன் மௌன மொழியில் கதைத்து காதலர் தினத்தை கொண்டாடிய நம்ம பதிவர் இப்போதெல்லாம் வாயில் முணு முணுக்கும் பாட்டு வரி


“நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா கவலைப்படாதே கண்ணா கவலைப்படாதே”


இப்பாடலை இவர் கன்கொனுக்கு ஆதரவாக பாடுவதாக கன்கொன் கோபி நினைத்திருக்கிறார். உண்மையில் இது அவரே அவருக்காக பாடும் பாடலாகும்.


பதிவர் ஆதிரை
படம் காட்டும் பதிவரான (பதிவுலகில் சொல்கிறேன்) இவர் காதலர் தின கொண்டாட்டத்தை வேலைத்தளத்தில் காதலிகளுடன் விமர்சையாக கொண்டாடி விட்டு கிடைத்த பரிசுப் பொருட்களை யாருக்கும் காட்டாமல் ஒளித்து வைத்துள்ளதாகவும் அந்த பரிசு பொருட்களை கொண்டு செல்ல “கன்டெயினர் ” ஒன்றை தேடுவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.


பதிவர் கௌபோய் மது
மஜா பதிவர் என்றழைக்கப்படும் பதிவர் மது காதலர் தினத்தன்று மிஸ்ஸிங் இவரை பற்றி தகவல் சேகரிக்க சென்ற எமது குழுவும் மிஸ்ஸிங். 


யாராவது இவங்களை கண்டால் பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க




இப்பதிவு சிரிப்பதற்கு மாத்திரமே என்பதை கூறிக்கொண்டு, இந்த மொக்கை பதிவின் இரண்டாம் பாகத்தை எழுத சொல்லி டிவிட்டிய அனுதினனுக்கு நன்றி சொல்கிறேன். இவரை பற்றி அதிகம் தெரியாததால் இவரது கொண்டாட்டம் பற்றி எழுத முடியவில்லை, அனுதினனை பற்றி நன்றாக தெரிந்த யாராவது பின்னூட்டத்தில் இவரது காதலர் தின கொண்டாட்டத்தை பற்றி எழுதவும்


பதிவர்களின் காதலர் தினம் - பகுதி 1

காதலர் தின கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களை கட்ட தொடங்கியிருக்கின்றன. இலங்கையிலுள்ள நம் பதிவர்கள் இந்நிகழ்வுக்கு எப்படி தயாராகியிருக்கின்றனர் என்பது பற்றிய டணால் அறிக்கை (பகீர் அறிக்கை என பத்திரிக்கையில் வருவதால் இது டணால் அறிக்கை). தன் உயிர் பற்றி கூட சிந்திக்காது வேவு பார்த்து இக்கட்டுரையை எழுதுவது யோ 007....

பதிவர் சுபாங்கன்
”போன வருஷம் நாம ட்ரை பண்ணுன பிகர், இந்த முறை யார லவ்விட்டு இருக்கோ தெரியாது, எதுக்கும் நம்ம ஸ்பெஷல் ஹெயார் கட்டிங் செய்து யாரையாவது கவர் பண்ண பார்க்க வேண்டும்,” என பச்சை நிறத்தில் உடை தயார் செய்கிறார் கொழும்பு பல்கலைகழக காதல் மன்னன் ஐந்தறைப் பெட்டி சுபாங்கன்

 இவர் வருடம் முழுவதும் ட்ரை பண்ணிய கெம்பஸ் பிகர்களின் எண்ணிக்கை 250ஐ தாண்டுவதால் இம்முறை வேறு இடத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளார். இடம் நிச்சயமாக தெரியாததால் எங்கு சென்று இவருக்கு காதலர் தின வாழ்த்தட்டை வழங்குவது என இவரது காதலிகள் திண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

பதிவர் (இட்லி போய்) கோபி
”நம்ம லெவலுக்கு ஒரு ஐஸ்வர்யா ராய் வரும்” என இருந்த கோபிக்கு அபிஷேக் அவரை திருமணம் செய்த செய்தி சில நாட்களிற்கு முன்னரே தெரிய வந்ததால் அபிஷேக் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். வடை போனதால் கோவம் மற்றும் கவலையில் இருக்கும் கோபி ஏதாவது பெண்களின் ஹாஸ்டலை முற்றுகையிடலாம் என நம்ப தகுந்த வட்டாரங்களிடமிருந்து செய்தி வந்திருக்கிறது.

எதற்கும் கவனமாயிருங்கள் ஹாஸ்டல் பெண்களே....

பதிவர் பவன்
தனது படங்களை ரசித்து தினமும் காதல் கடிதம் எழுதும் பெண் ரசிகைகளிலிருந்து (ரசிகைகள் என்றாலே பெண்கள்தானே அப்புறம் என்ன பெண் ரசிகைகள் என யாரும் கேள்வி கேட்க கூடாது? அப்புறம் உங்களை பற்றியும் அவர் படம் போட்டுடுவார்) யாரையாவது தெரிவு செய்யும் யோசனையிலிருக்கும் இவர், திருகோணஸ்வரத்திற்கு வரும் யாரையாவது தெரிவு செய்யலாமா எனவும் யோசித்து வருகிறார்.

எதற்கும் நாம் கவனமாயிருக்க வேண்டும், மனுஷம் 15ம் திகதி எரிந்தும் எரியாமலும் வந்தாலும் வந்திடுவார்.

பதிவர் வந்தியத்தேவன்
இப்போது இங்கிலாந்திலிருக்கும் இவர் வெள்ளைக்கார பெண்களை கணக்கு செய்ய போய் சில பல உள் காயங்களுடன் வலம் வருவதாக தகவல். எனினும் எதற்கும் மனம் தளரா வந்தி அவர்கள் இங்கிலாந்தில் (தான் தனியாக மட்டும்) இருக்கையில் எடுக்கப்பட்ட படங்களை மூஞ்சிப்புத்தகத்தில் போட்டு உலகம் முழுவதும் காதலி தேடுகிறார்.

இப்போதைக்கு இவர் இங்கிலாந்து இளவரசி ஒருத்தருடன் காதல் வயப்பட்டிருப்பதாகவும், அதனால் பக்கிங்காம் அரண்மனையில் இவ்வருட காதலர் தினத்தை கொண்டாடவிருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. இவரது பழைய காதல் கதைகளை கேள்விப் பட்டால் மகாராணி இவருக்கு என்ன தண்டனை வழங்குவார் என இவரது பதிவுலக சகாக்கள் கவலையுடன் கலந்துரையாடி கொண்டிருக்கின்றனர்.
இங்கிலாந்தில் பதிவர் வந்தியில் 
முதுகில் வரையப்பட்டுள்ள இதயம்

மற்றைய பதிவர்களின் தகவல்கள் நாளை தொடரும்