நூடுல்ஸ் (ஐயம் பெக்)

தேர்தல், பண்டிகை விடமுறை முடிந்து பழையபடி எல்லாரும் தமது வேலைகளுக்கு திரும்பி விட்டனர். புது அரசாங்கம், புது அமைச்சர்கள் என நாடு பழைய மாதிரியே பயணிக்கிறது. கொஞ்ச காலமாக எனது இணைய தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பதிவு எழுதாவிடினும் அநேகமாக எல்லாரது பதிவுகளையும் வாசித்து வந்தேன். சிலவற்றுக்கு பின்னூட்டமும் இட்டேன், இனி அடிக்கடி பதிவுகள் எழுதலாம் என்றிருக்கிறேன்.

-----------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு மாதிரி ஐ.பி.எல் காய்ச்சல் முடிந்து விட்டது, நான் அதிகமாக ஐ.பி.எல்லை பார்க்கவில்லை, காரணம் எனக்கு 20-20 கிரிக்கட் போட்டிகளை பற்றி பெரிதாக நல்ல அபிப்பிராயம் கிடையாது, அதிலும் பணம் சம்பாதிப்பதை மாத்திரம் நோக்கமாக கொண்ட இத்தொடர் பற்றிய நல் அபிப்பிராயம் சுத்தமாக கிடையாது எனலாம். நான் ஏற்கனவே ஐ.பி.எல் என்னும் கிரிக்கட் வியாபரம் பற்றி கூறியதை எதிர்த்தவர்கள் இப்போது லலித் மோடியை பதவியிலிந்து நீக்கிய விடயம் அறிந்ததும் வாயடைத்து போய் இருக்கின்றனர், ஆனாலும் இப்போது பலர் லலித் மோடியை விமர்சிப்பதற்கான முக்கிய காரணம் பொறாமை ஆகும். பல ஐ.பி.எல் போட்டிகளின் முடிவுகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்ததாக வெளிவரும் செய்திகளை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறேன். அப்படி எந்த வீரராவது பணம் வாங்கி போட்டியை விட்டு கொடுத்திருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த வீரர்கள் யாராக இருந்தாலும் வாழ்நாள் கிரிக்கட் விளையாட முடியாமல் தடை செய்யப்பட வேண்டும். ஐபிஎல் கிரிக்கட் விளையாட்டில் ”புக்கிகள்” போட்டி முடிவை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதாக வெளிவரும் தகவல்களை ஐசிசி விசாரித்து அவற்றுக்கு தடை கொண்டு வரவேண்டும்.


20-20 உலக கிண்ணம் தொடங்க இருக்கிறது, ஏதாவது அதிர்ஷம் உள்ள அணி கோப்பையை கைப்பற்றும். ஆனாலும் இலங்கை வென்றால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம் யார் கிண்ணத்த கைப்பற்றுவர் என????

-----------------------------------------------------------------------------------------------------------------------

”வந்தி”யில்லாத இலங்கை பதிவுலகும், ”லோஷனி”ல்லாத விடியலும் ரொம்பவே போரடிக்கின்றன. மாலை வேளைகளில் மழை வந்து வெளியே போக விடாமல் செய்வதால், இப்போதெல்லாம் நான் அதிகமாக பாட்டு கேட்பதிலேயே எனது பொழுதுதை களிக்கின்றேன். “விண்ணைத்தாண்டி வருவாயா” மற்றும் ”பையா” பாடல்கள் அதிகமாக கேட்ட பாடல்களாகும். ”ராவண்” (தமிழ்) பாடல்களை கேட்க ரொம்பவே எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். முதல் காரணம் பாடல்களுக்கு இசையமைப்பு நம்ம தல ரகுமான். இரண்டாவது காரணம் இயக்குனர் மணிரத்தினம். இவர் இசையமைப்பாளர்களிடம் எப்படி சிறந்த பாடல்களை வாங்குவது என்னும் கலையை நன்றாக கற்றவர். அன்றைய அஞ்சலி, நாயகன், மௌனராகமாகட்டும் இன்றைய ஆய்த எழுத்து, குருவாகட்டும் மணிரத்தினத்தின் பட பாடல்கள் என்றுமே சோடை போனதில்லை.

”அடடா மழைடா, அடை மழைடா” பாடல் ”என் காதல் சொல்ல நேரமில்லை” என நா. முத்துக்குமார் எம்மை கவி மழையில் நனைய வைத்து விட்டார். தாமரை, நா.முத்துக்குமார் எழுதிய பாடல்களை எப்போதும் ரசிக்கலாம். இன்றைய தலைமுறையின் மனம் கவர் பாடலாசிரியர்கள் இவர்களேயாகும். 
-----------------------------------------------------------------------------------------------------------------------

தொடர்ந்து பதிவுகள் எழுதிய இலங்கை பதிவர்கள் பலரும். இப்போது அவ்வாறு எழுதுவதில்லை. இப்போது வரோ, சதீஷ் , பவன் போன்ற சிலரே அடிக்கடி எழுதுகின்றன. தமிழக பதிவர்களும் சங்கம் அமைக்க போய் தமக்குள் தர்க்கம் ஏற்படுத்தியது கவலையான விடயம். காரணம் தமக்குள் பொறாமை இல்லாத ஒரே குழுவாக நான் பார்ப்பது பதிவர்களையாகும். வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் பதிவர்கள் வேறுபடாமலிக்க வேண்டும். அதுதான் பதிவுலகிற்கு நல்லதாகும்
-----------------------------------------------------------------------------------------------------------------------

ம்ம்ம். அமீர்கான் மச்சமுள்ள மனுஷன்

அடிக்கடி எழுதலாம் என்னும் நம்பிக்கையுடன் விடைபெறுகின்றன



18 Responses
  1. வாங்கோ வாங்கோ....
    சந்திப்பதில் மகிழ்ச்சி...

    மோடி ஒழிஞ்சார்...
    அடுத்தவராவது கிறிக்கற்றுக்கு முதலிடம் கொடுக்கிறாரா பார்ப்போம்... :)

    போட்டி நிர்ணயம் நடந்திருந்தால் அவை பற்றிய தண்டனைகளுக்காகக் காத்திருக்கிறேன்...

    பதிவுலகம் ஓய்வெடுக்குது... ;)

    ராவண் பாட்டு வரோணும் எண்டு நானும் பாத்துக் கொண்டிருக்கிறன்...

    அடிக்கடி பதிவில் சந்திப்பம்... :))


  2. GEETHA ACHAL Says:

    வாங்க..திரும்பி வந்து எழுத தொடங்கிவிடுங்க...வீட்டில் அம்மா எப்படி இருக்கின்றாங்க...அடிக்கடி ப்ளாக் பக்கம் வாங்க...நன்றி


  3. Subankan Says:

    இந்தப்பதிவு அப்படியே என் மனநிலையைப் பிரதிபலிப்பதால் வரிக்குவரி வழிமொழிகிறேன்.

    இலங்கைப்பதிவர்கள் பதிவு எழுதுவதைக்குறைத்துவிடக் காரணம் என்னவாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்?


  4. வாங்கோ வாங்கோ


  5. //தொடர்ந்து பதிவுகள் எழுதிய இலங்கை பதிவர்கள் பலரும். இப்போது அவ்வாறு எழுதுவதில்லை. இப்போது வரோ, சதீஷ் , பவன் போன்ற சிலரே அடிக்கடி எழுதுகின்றன. தமிழக பதிவர்களும் சங்கம் அமைக்க போய் தமக்குள் தர்க்கம் ஏற்படுத்தியது கவலையான விடயம். காரணம் தமக்குள் பொறாமை இல்லாத ஒரே குழுவாக நான் பார்ப்பது பதிவர்களையாகும். வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் பதிவர்கள் வேறுபடாமலிக்க வேண்டும். அதுதான் பதிவுலகிற்கு நல்லதாகும்//

    என் கவலையும் இதுதான். பலரை காணவில்லை காணாமல் போன பதிவர்கள் என்று ஒரு பதிவிடலாம் என இருந்தேன். நேரம் கிடைக்கவில்லை. முடிந்தால் நீங்கள் போடுங்கள் போடும் பதிவில் மீண்டும் பழைய களை வர வேண்டும். ஆனால் இந்த கான்கொனின் பின்னூட்டம் மட்டும் குறையலஎடா சாமி.

    அந்தப் படத்தில் இருப்பது அமீர்கான் என்று தவறாக சொன்ன யோவை கண்டிக்கின்றேன். அதில் இருப்பது முன்னாள் வெற்றி வானொலி அறிவிப்பாளரும் இந்நாள் வெட்டிப்பயலும் என சொல்லப்படுகின்றது. பெயரை நீங்கள் கண்டு பிடியுங்கள்.


  6. EKSAAR Says:

    //தொடர்ந்து பதிவுகள் எழுதிய இலங்கை பதிவர்கள் பலரும். இப்போது அவ்வாறு எழுதுவதில்லை.//

    நிர்ப்பந்தம் வேண்டாமே..


  7. balavasakan Says:

    ராவணா ஹிந்தி பாடல்களில் கார்த்திக் behana de பாடல் நெஞ்சை அள்ளிக்கொண்டு போகிறது ... இந்த பாடல் தமிழிலும் சூப்பர் டூப்பர் ஹிட்டு ஆகும் பாருங்கள்...


  8. உண்மைதான் அண்மைக் காலமாக இலங்கைப் பதிவுலகம் அமைதியாகத் தான் இருக்கின்றது. வரோவும் சதீசும் மட்டும் தினமும் எழுதுகின்றார்கள். ஏனையவர்கள் அனைவருக்கும் நேரம் கிடைப்பதில்லையோ தெரியவில்லை.

    எஸ்கர் சொன்னதுபோல் எவரையும் நிர்ப்பந்தீக்கமுடியாது,

    மருதமூரான் கூட தன்னுடைய கல்லூரியைச் சேர்ந்த ஒருவருடன் பிசி என மூஞ்சிப்புத்தக தகவல் தெரிவிக்கின்றன.


  9. KANA VARO Says:

    //இப்போது வரோ, சதீஷ் , பவன் போன்ற சிலரே அடிக்கடி எழுதுகின்றன.//

    //வந்தியத்தேவன் said...
    உண்மைதான் அண்மைக் காலமாக இலங்கைப் பதிவுலகம் அமைதியாகத் தான் இருக்கின்றது. வரோவும் சதீசும் மட்டும் தினமும் எழுதுகின்றார்கள். ஏனையவர்கள் அனைவருக்கும் நேரம் கிடைப்பதில்லையோ தெரியவில்லை.//

    நான் விஜய் ரசிகன் தான். ஆனால் சுறா மாதிரி போட்டியில்லாமல் தனிய எழுதுறது போரடிக்குது. இலங்கை பதிவுலகம் பற்றி ஒரு பதிவெழுத ஐடியால இருக்கன்.


  10. //////கன்கொன் || Kangon said...
    வாங்கோ வாங்கோ....
    சந்திப்பதில் மகிழ்ச்சி...

    மோடி ஒழிஞ்சார்...
    அடுத்தவராவது கிறிக்கற்றுக்கு முதலிடம் கொடுக்கிறாரா பார்ப்போம்... :)

    போட்டி நிர்ணயம் நடந்திருந்தால் அவை பற்றிய தண்டனைகளுக்காகக் காத்திருக்கிறேன்...

    பதிவுலகம் ஓய்வெடுக்குது... ;)

    ராவண் பாட்டு வரோணும் எண்டு நானும் பாத்துக் கொண்டிருக்கிறன்...

    அடிக்கடி பதிவில் சந்திப்பம்... :))/////



    முதல் பின்னூட்டத்திற்கு நன்றி கோபி,

    என்னை போல் உங்களுக்கும் ஐபிஎல்லில் பெரிய ஈர்ப்பில்லை என்பது மகிழ்ச்சியான விடயம்

    அடிக்கடி பதிவில் சந்திப்பம் என சொன்னால் போதாது, மீண்டும் பதிவுகள் எழுதவும்


  11. ///////
    Geetha Achal said...
    வாங்க..திரும்பி வந்து எழுத தொடங்கிவிடுங்க...வீட்டில் அம்மா எப்படி இருக்கின்றாங்க...அடிக்கடி ப்ளாக் பக்கம் வாங்க...நன்றி

    //////
    வருகைக்கு நன்றி கீதா அக்கா, கட்டாயம் உங்களது ருசியான பக்கங்களை வந்து பார்ப்பேன், அம்மா நலமாக இருக்கிறார்கள் அக்கா.


  12. //////
    Subankan said...
    இந்தப்பதிவு அப்படியே என் மனநிலையைப் பிரதிபலிப்பதால் வரிக்குவரி வழிமொழிகிறேன்.

    இலங்கைப்பதிவர்கள் பதிவு எழுதுவதைக்குறைத்துவிடக் காரணம் என்னவாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்?
    /////



    அந்த காரணத்தை தான் நானும் தேடி கொண்டிருக்கிறேன் சுபாங்கன்


  13. //////
    பனையூரான் said...
    வாங்கோ வாங்கோ
    //////



    வந்துட்டோமுல்ல


  14. //////
    என் கவலையும் இதுதான். பலரை காணவில்லை காணாமல் போன பதிவர்கள் என்று ஒரு பதிவிடலாம் என இருந்தேன். நேரம் கிடைக்கவில்லை. முடிந்தால் நீங்கள் போடுங்கள் போடும் பதிவில் மீண்டும் பழைய களை வர வேண்டும். ஆனால் இந்த கான்கொனின் பின்னூட்டம் மட்டும் குறையலஎடா சாமி.

    அந்தப் படத்தில் இருப்பது அமீர்கான் என்று தவறாக சொன்ன யோவை கண்டிக்கின்றேன். அதில் இருப்பது முன்னாள் வெற்றி வானொலி அறிவிப்பாளரும் இந்நாள் வெட்டிப்பயலும் என சொல்லப்படுகின்றது. பெயரை நீங்கள் கண்டு பிடியுங்கள்
    //////



    அப்ப அவர் வெட்டி பயலா சதீஷ்?


  15. //////
    EKSAAR said...
    //தொடர்ந்து பதிவுகள் எழுதிய இலங்கை பதிவர்கள் பலரும். இப்போது அவ்வாறு எழுதுவதில்லை.//

    நிர்ப்பந்தம் வேண்டாமே..
    //////



    நிர்ப்பந்திக்க வில்லை என்ன கொடுமை சார், வேறு காரணம் ஏதாவது இருக்குமோ என கேட்கிறேன்


  16. //////
    Balavasakan said...
    ராவணா ஹிந்தி பாடல்களில் கார்த்திக் behana de பாடல் நெஞ்சை அள்ளிக்கொண்டு போகிறது ... இந்த பாடல் தமிழிலும் சூப்பர் டூப்பர் ஹிட்டு ஆகும் பாருங்கள்.
    //////




    ஆமாம் பாலா நானும் இன்று கேட்டேன், கலக்கலாய் இருக்கிறது


  17. //////
    வந்தியத்தேவன் said...
    உண்மைதான் அண்மைக் காலமாக இலங்கைப் பதிவுலகம் அமைதியாகத் தான் இருக்கின்றது. வரோவும் சதீசும் மட்டும் தினமும் எழுதுகின்றார்கள். ஏனையவர்கள் அனைவருக்கும் நேரம் கிடைப்பதில்லையோ தெரியவில்லை.

    எஸ்கர் சொன்னதுபோல் எவரையும் நிர்ப்பந்தீக்கமுடியாது,

    மருதமூரான் கூட தன்னுடைய கல்லூரியைச் சேர்ந்த ஒருவருடன் பிசி என மூஞ்சிப்புத்தக தகவல் தெரிவிக்கின்றன
    //////




    நிர்ப்பந்திக்க முடியாது என்பது உண்மைதான் வந்தி, ஆனாலும் we miss them, we miss u also


    மருதமூரான் தோழியுடனா தோழனுடா பிசி?


  18. //////

    நான் விஜய் ரசிகன் தான். ஆனால் சுறா மாதிரி போட்டியில்லாமல் தனிய எழுதுறது போரடிக்குது. இலங்கை பதிவுலகம் பற்றி ஒரு பதிவெழுத ஐடியால இருக்கன்
    //////




    கட்டாயம் எழுதுங்கள்