சுறாவும் பதிவலகும்
சுறா வி.ஐ.பி காட்சிக்கு ஒரு டிக்கட் கிடைத்துள்ளது, ஆனாலும் இதற்காக மட்டும் கொழும்பு சென்று பார்த்துவிட்டு வருவது இப்பிசியான காலகட்டத்தில் எனக்கு கடினம் என்பதால் செல்லவில்லை.
ஆனாலும் எப்படியும் இந்த வாரமே படத்தை பார்த்துவிட வேண்டும் காரணம், வழமையாக விஜய் படம் வந்தால் பதிவுலகம் விஜய் பற்றிய பதிவுகளை போட்டு நிரப்பி படத்தை விமர்சிக்கிறேன் என முழு கதையையும் சொல்லிவிடுவார்கள். எங்களது வீட்டில் அம்மா மற்றும் சிறு வாண்டுகள் அனைவருக்கும் ரஜனி படத்திற்கு பிறகு விஜய் படம் பார்க்கதான் கொள்ளைப்பிரியம். அவர்களுடன் சென்று பார்க்க வேண்டும். எனக்கும் விஜய் படம் பெரிய ஏமாற்றத்தை தந்ததில்லை காரணம் விஜய் படத்திற்கு உலக தர படத்தை பார்க்கும் எதிர்பார்ப்போடு நான் செல்வதில்லை. கமல் படத்திற்கு செல்லும் போது நான் விஜயிடம் எதிர்பார்ப்பதை அங்கு தேடுவதில்லை.
ஆனாலும் 75 வீதமான பதிவுகள் நாளை முதல் விஜயை திட்டி வெளிவரும். பலவற்றில் விஜய் என்பவரை விமர்சிப்பதையே முக்கிய கடமையாக கொண்டிருக்கும்.
பையா படத்தில் கார்த்தி பலரோடு பறந்து சண்டை போடுவதை ரசித்த பலரும், ஆதவனில் சூர்யாவின் சாகசங்களை ரசித்தவர்களும், அசலில் அஜித்தின் ஹீரொயிசத்தை ரசித்த பலரும் குருவியில் விஜய் சண்டை போடுவதை விமர்சித்திருப்பர், காரணம் விஜய் என்னும் நடிகனை எதிர்க்க வேண்டும் என்பதற்காக. காரணம் பலருக்கு விஜய் பற்றி விமர்சிப்பது பேஷனாகி போய் விட்டது.
பி.கு.
பதிவுகளை வாசிக்கும் விஜய் ரசிகனான எனது நண்பனொருவன் என்னிடம் சொல்லியவை, இவை யோசித்து பார்க்கும் போது உண்மையாகவே தெரிகிறது.
பி.பி.கு
நான் விஜய், அஜித், கமல், ரஜனி யாருடைய ரசிகனுமில்லை, எனக்கு எல்லாரது படமும் பிடிக்கும். நான் ஏ.ஆர். ரகுமானின் இசைக்கு மட்டும் தீவிர ரசிகன் என்பதை இங்கு சொல்லிக் கொள்கிறேன்.
ஆனாலும் எப்படியும் இந்த வாரமே படத்தை பார்த்துவிட வேண்டும் காரணம், வழமையாக விஜய் படம் வந்தால் பதிவுலகம் விஜய் பற்றிய பதிவுகளை போட்டு நிரப்பி படத்தை விமர்சிக்கிறேன் என முழு கதையையும் சொல்லிவிடுவார்கள். எங்களது வீட்டில் அம்மா மற்றும் சிறு வாண்டுகள் அனைவருக்கும் ரஜனி படத்திற்கு பிறகு விஜய் படம் பார்க்கதான் கொள்ளைப்பிரியம். அவர்களுடன் சென்று பார்க்க வேண்டும். எனக்கும் விஜய் படம் பெரிய ஏமாற்றத்தை தந்ததில்லை காரணம் விஜய் படத்திற்கு உலக தர படத்தை பார்க்கும் எதிர்பார்ப்போடு நான் செல்வதில்லை. கமல் படத்திற்கு செல்லும் போது நான் விஜயிடம் எதிர்பார்ப்பதை அங்கு தேடுவதில்லை.
ஆனாலும் 75 வீதமான பதிவுகள் நாளை முதல் விஜயை திட்டி வெளிவரும். பலவற்றில் விஜய் என்பவரை விமர்சிப்பதையே முக்கிய கடமையாக கொண்டிருக்கும்.
பையா படத்தில் கார்த்தி பலரோடு பறந்து சண்டை போடுவதை ரசித்த பலரும், ஆதவனில் சூர்யாவின் சாகசங்களை ரசித்தவர்களும், அசலில் அஜித்தின் ஹீரொயிசத்தை ரசித்த பலரும் குருவியில் விஜய் சண்டை போடுவதை விமர்சித்திருப்பர், காரணம் விஜய் என்னும் நடிகனை எதிர்க்க வேண்டும் என்பதற்காக. காரணம் பலருக்கு விஜய் பற்றி விமர்சிப்பது பேஷனாகி போய் விட்டது.
பி.கு.
பதிவுகளை வாசிக்கும் விஜய் ரசிகனான எனது நண்பனொருவன் என்னிடம் சொல்லியவை, இவை யோசித்து பார்க்கும் போது உண்மையாகவே தெரிகிறது.
பி.பி.கு
நான் விஜய், அஜித், கமல், ரஜனி யாருடைய ரசிகனுமில்லை, எனக்கு எல்லாரது படமும் பிடிக்கும். நான் ஏ.ஆர். ரகுமானின் இசைக்கு மட்டும் தீவிர ரசிகன் என்பதை இங்கு சொல்லிக் கொள்கிறேன்.
எனக்கும் இந்தக் கோபம், எரிச்சல் உண்டு.
தேவையற்று விஜயை மட்டும் வம்புக்கு இழுப்பது போல் தெரிகிறது.
அதனால் இம்முறை சுறா விமர்சனங்களைப் படிப்பதில்லை என்று ஒரு முடிவு.
பதிவோடு முழுவதுமாக ஒத்துப் போகிறேன்.
//பையா படத்தில் கார்த்தி பலரோடு பறந்து சண்டை போடுவதை ரசித்த பலரும், ஆதவனில் சூர்யாவின் சாகசங்களை ரசித்தவர்களும், அசலில் அஜித்தின் ஹீரொயிசத்தை ரசித்த பலரும் குருவியில் விஜய் சண்டை போடுவதை விமர்சித்திருப்பர், காரணம் விஜய் என்னும் நடிகனை எதிர்க்க வேண்டும் என்பதற்காக. காரணம் பலருக்கு விஜய் பற்றி விமர்சிப்பது பேஷனாகி போய் விட்டது.
//
அப்படியில்லை, விஜய் ஒரேமாதிரிப்படங்களில் தொடர்ந்து நடிப்பதையே விமர்சிக்கிறார்கள். அவரின் இறுதி ஐந்து படங்களின் அடிப்படையில் வேறுபாடு இருக்கிறதா என நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள்? மற்றபடி யாருக்கும் விஜயுடன் பங்காளிச்சண்டையோ, எல்லைப்பிரச்சனையோ இருப்பதாகத் தெரியவில்லை
சூப்பர் இதுதான் உண்மை. தங்களை பெரிய மேதாவிகள் போல காட்டவே இது. என் மனதில் உள்ளதை சொல்லிவிட்டீர்கள். உங்கள் நண்பனின் கருத்தை சொல்லிவிட்டீர்கள். சிலவேளை சுராவை நீங்கள் பார்த்து உங்களுக்கு படம் பிடித்து நீங்கள் நன்றாக விமர்சனம் எழுதினால் ஒரு விஜய் ரசிகனை விட கிழி வாங்குவீர்கள். பதிவுலகையும் திரை உலகையும் வாழ வைக்கின்றார் விஜய்.
சுறா எப்போவெளியாகின்றது? தீபாவளிக்குத் தானே
விஜய் தான் நடித்த படத்தை மறுபடியும் உல்டாலக்கடி செய்து நடித்தாலும் அவரின் ரசிகர்கள் ரசிப்பார்கள்..........
வரப்போகும் சுறாவிலும் பல்லை கடித்து கொண்டு வசனம் பேசியிருக்கும் விஜய் அண்ணாச்சிக்கு வால் பிடிச்சே தீருவோம்.... ஆங்....
சத்தியமா நாங்க திருந்தவே மாட்டோம்.....
//வந்தியத்தேவன் said...
சுறா எப்போவெளியாகின்றது? தீபாவளிக்குத் தானே//
i like it thalaivaa......
@சுபா அண்ணா:
கார்த்தி முதற் தடவையாக செய்கிறார் என்றபடியால் அதை இரசிக்கலாம் என்பது எந்தளவுக்குச் சரி?
இத்தனை காலமும் அனைவரும் செய்ததை அவர் அப்படியே திரும்பச் செய்கிறார் தானே?
மற்றறையது அப்படிப் பார்த்தால் ரஜினிகாந் என்ன மாதிரி?
அண்ணாமலை போன்ற படங்களக்கு அண்மையாக வந்த அனைத்துமே ஏறத்தாழ ஒரே கருவைக் கொண்டவை தானே?
என்னுடைய ஒரே கேள்வி ஏன் விஜய் மட்டும் தான் அந்த விமர்சனத்துக்குள் என்பதே?
விஜய் படமென்றால் இதுதான்.
ஏதோ விஜய் விருதுப் படங்களில் வழமையாக நடிப்பவர் அதனால் அவரின் இப்போதைய மசாலாத்தனத்தை எதிர்ப்பது போலுமள்ளவா இருக்கிறது?
அதைத் தவிர விஜய் தனது பாணியில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்பதில் எனக்கு முழுமையான ஒற்றுமை உண்டு, ஆனால் அதற்காக மட்டும் இந்தளவுக்கு இலக்கு வைக்கப்படுவது தான் என் பிரச்சினை.
(நான் கமல்ஹாசனின் நடிப்பின் இரசிகன். )
வந்தி மாமா வயசு போனால் இப்பிடியா வெளில சொல்றது கன்னிப்பெண்கள் என்ன நினைப்பார்கள். அட கான்கொன் அசத்துற போடா. எப்பிடி இப்பிடி ஒரு கோபம்.
@ கன்கொன்
கார்த்தி முதற்தடவையாகச் செய்தாலும் ரசிக்கும்படியாக இருந்தால் ரசிக்கலாம். விஜயின் ஆரம்பகாலப் படங்களின் ரசிகன் நான் என்பதைச் சொல்லிக்கொள்கிறேன். ரஜினிகாந்த் அப்படி நடிக்கும்போது பதிவுலகம் இப்படி இல்லை. விஜய் மட்டுமல்ல, சூர்யாவின் ஆதவனையும் பலரும் போட்டுத் தாக்கியதை ஞாபகப்படுத்திக்கொள்கிறேன்
@சுபா அண்ணா:
:)))
(நான் ஓடுறன்....
நமக்கு சினிமா வேணாம்.
அம்மா அப்பவே சொன்னா சினிமா பற்றியெல்லாம் கதைக்கப் போகாத, உனக்கு அறிவு போதாதெண்டு. )
மற்றும்படி எனது நிலையில் நான் உறுதியாக இருக்கிறேன்.
வாதம்புரிய தயாரில்லை.
1. எனக்கு சினிமா பற்றி அவ்வளவாக தெரியாது.
2. விஜயில் அண்மைக்கால படங்கள் சிலவற்றைப் பார்க்கவில்லை.
3. விஜயோடு பரவலாக ஒப்பிடப்படும் அஜித் இன் அண்மைக்கால படங்கள் ஏராளமானவற்றைப் பார்க்கவில்லை.
4. பையா பற்றிக் கதைக்க 45 நிமிடம் மட்டுமே பார்த்தது போதாது.
ஆகையால் நான் இதிலிருந்து தப்பி ஓடுகிறேன். ;)
(மற்றும்படி ஒரு பொதுவான கருத்து.
அஜித் இரசிகர்கள் வந்து விஜயின் படங்களை தரக்குறைவாகக் கதைப்பது வெறும் போட்டிச் செயற்பாடே.
அஜித் விதிவிலக்கானவர் என்பது என் கருத்து. )
@Subankan
ரஜினிகாந்த் அப்படி நடிக்கும் போது இல்லாத பதிவுலகம் இன்று விஜயை தாக்கும் போது அன்றைய அந்த படங்களின் புகழ் பாடி ஒப்பிட்டு வசைபாடுகின்றதே இது மட்டும் நியாயமா? என்னது ஆதவனை பலர் போட்டுத்தாக்கினாங்களா? விஜயை வேட்டையாடியவர்களில் பத்து சதவேதம் கூட ஆதவனுக்கு எதிர்ப்பில்லை.
என் அன்பான பதிவுலக நண்பர்களுக்கு,
விஜய் என் மூச்சு,
விஜய் என் பேச்சு,
விஜய் என் வாச்சு,
விஜய் ஒரு பட்டாசு,
சுறா வந்தா
விஜய் ஒரு டம்மி பீசு ....
மேலும் சுறா பற்றிய சுவாரஸ்யமான விவரங்களுக்கு
http://verumpaye.blogspot.com/
//விஜய் என்னும் நடிகனை எதிர்க்க வேண்டும் என்பதற்காக//
இந்த ஒரு வசனத்துக்காகவே எனது முதலாவது பின்னூட்டத்தை இட்டேனேயன்றி நான் அஜித் ரசிகனோ, அல்லது விஜயின் தீவிர எதிர்ப்பாளனோ அல்லன். பையா படம் வசூலில் முதலிடத்தில் நிற்கிறதாம். எனவே மசாலாப்படங்கள் ரசிப்புக்கு அப்பாற்பட்டவையும் அல்ல. ஏனய மசாலாப்படங்களைவிட விஜய் படங்களுக்கு அதிக எதிர்ப்பு வருவதிலிருந்து பிரச்சினை எங்கேயென்று தெரியவில்லையா? சூர்யாவும் தொடர்ந்து ஆதவன் மாதிரியான படங்களில் நடித்தால் அந்த எதிர்ப்பு இன்னும் அதிகரிக்கலாம் என்பது எனது எண்ணம் சதீஷ்.
மற்றபடி எனது பின்னூட்டங்கள் யாராவது விஜய் ரசிகர்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து இங்கே பின்னூட்டுவதையும் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
உங்கள் கருத்தில் மனம் புண்படவில்லை அண்ணாமலையை குறிப்பிட்டு நீங்கள் பின்நூடியதே என்னை இழுத்துவந்தது, இதை இத்துடன் நிறுத்துவோம்.
நானும் நிறுத்திக் கொள்கிறேன். ;)
கருத்துப் பரிமாற்றங்களை எப்போதும் ஆதரிக்கிறேன்.
சுறா வெல்லட்டும், எந்திரனும் வெல்லட்டும், ராவணாவும் வெல்லட்டும்.... :)
பட்... உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு
//பையா படத்தில் கார்த்தி பலரோடு பறந்து சண்டை போடுவதை ரசித்த பலரும்,//
ஒரு நிமிஷத்துக்கு கார்த்தியை காந்தின்னு படிச்சுத் தொலைச்சுட்டேன்.
அதுவும் நல்லாத்தான் இருந்திருக்கும்னு இப்போ தோணறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பதிவும் பலநாட்களுக்கு பிறகு கும்மிகளும் நன்றாக இருந்தது பையா சண்டைக்காட்சிகள் கூட லிங்கு சாமி அருமையாக எடுத்திருந்தார் அதாவது ரசிக்கும் படியாக.... விஜய் படங்களில் சண்டைக்காட்சிகள் ரசிக்கும் படியாக இருப்பதில்லை வெறும் பஞ்ச்டயலாக்கை மட்டும் நம்பித்தான் விஜய் படங்கள் இருக்கும் வேறு எதிலும் விஜய்படங்களில் அக்கறை செலுத்தபடுவதில்லை திரைக்கதை ஒளிப்பதிவு எல்லாம் படு மோசமாக இருக்கும் ...
பையா அப்படி அல்ல அருமையான ஒளிப்பதிவும் காட்சி அமைப்புகளும் அலுக்காமல் நகரும் படம் சண்டைக்காட்சிகளில் ஓரளவு தொய்வுதான் இருந்ததாலும் பின்னர் நன்றாக பிக்கப் ஆகிறது படம்...
இதுதான் எனது கருத்து..
Yellarukkum porama vijay padam 10 cody Budgetil veliyahi oru mathattil 30 Kodi sambathittu vidum. Vijay padam nadippathu avarathu rasiharukkaha mattume. Matravarhalukkaaha nadittal avarathu rasiharhal virumba maattarhal padam 30 kodi sambaathikkathu.
//பலருக்கு விஜய் பற்றி விமர்சிப்பது பேஷனாகி போய் விட்டது.//
பேஷனை முதலில் அறிமுகம் செய்தவர்கள் இப்போது செத்த பாம்பை அடிப்பதை நிறுத்த தொடங்கிவிட்டார்கள்..
நானும் ரஜினி படத்திற்கு அப்புறம் விஜய் படம் தான் பார்ப்பேன்.நிஜ வாழ்கையில் வேலைப்பளு அது இது னு இருக்கும் .ஒரு என்ஜாய்மேன்ட்க்கு சினிமா பாக்க போறப்போ நிஜ வாழ்க்கைய படமா எடுக்கறேன் பேர்வழினு எல்லாரையும் அழ வைக்கறதுக்கு பதிலா நாலு பைட்,அஞ்சு பாட்டு,கொஞ்சம் காமெடி னு படம் வரர்துல ஒரு தப்பும் இல்லையே.ஆனால் சுராவில் காமெடி இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது படம் பார்த்தபின்.
simply stopping by to say hey