இலங்கை பதிவர்களை காணவில்லை
தொடர்ந்து பதிவுகள் எழுதிய இலங்கை பதிவர்கள் பலரை கடந்த சில நாட்களாக காணவில்லை. இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. தொடர்ந்து எழுதும் ஒரு சிலரை தவிர மற்றவர்களும் ஏதோ ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கொரு தடவையும் எழுதுகின்றனர்.
“என்ன கொடுமை சார்” சொல்வதை போல் யாரையும் எழுத நிர்பந்திக்க முடியாவிடினும் பதிவுலகத்தை விட்டு கொஞ்ச காலம் விலகியிருக்க எண்ணியிருந்தால், அந்த கொஞ்ச காலம் கொஞ்ச கொஞ்சமாக அதிகரித்து, பதிவெழுதும் எண்ணமே கைவிட்டு போய்விடலாம் என்ற அனுபவம் தனிப்பட்ட அனுபவம் இருக்கிறது.
எல்லா பதிவர்களும் இப்படி யோசித்து ஒதுங்கியிருந்தால், பல பதிவர்களை நாம் இழக்கவேண்டியிருக்குமோ என்னும் பயம் எனக்கு வந்துள்ளது. சமீபத்தில் இலங்கை பதிவர்கள் நல்ல போர்மில் இருந்த கால கட்டமாக நான் நினைப்பது, பதிவர் சந்திப்புகளிற்கு முன்னரும், பின்னருமான கால கட்டங்களாகும்.
பதிவர்கள் சிலரோடு கதைத்த போது இன்னுமொரு சந்திப்பு இருந்தால் நன்றாக இருக்குமென அவர்களும் நினைக்கிறது புரிகிறது. ஆக மீண்டும் ஒரு பதிவர் சந்திப்புக்கு யாராவது ஏற்பாடு செய்தால், இழந்த போர்மை பலரும் பெறலாம் என நினைக்கிறேன், ஆனால் “பூனைக்கு யார் மணி கட்டுவது?”. யாராவது ஒரு பதிவர் தொடங்கி வைத்தால் நன்றாக இருக்குமென நினைக்கிறேன். யாராவது ஒரு பதிவர் முன்வரலாம். முன் வந்தால் ஏற்கனவே சந்திப்புகளை ஏற்பாடு செய்த குழு அவர்களுக்கு உதவுமென நினைக்கிறேன்.
முன்னைய இரண்டு சந்திப்புகளையும் தொடர்புபடுத்திய பதிவர் வந்தியத்தேவன் இப்போது இலங்கையில் இல்லாமையினால் அந்த தொடர்புபடுத்தும் பொறுப்பை சின்ன வந்தி விரும்பினால் செய்யலாம் என நினைக்கிறேன். கோபியை நான் ஏற்பாடு செய்ய சொல்லவில்லை, தொடர்புபடுத்த (Coordinator) விரும்பினால் நல்லாயிருக்குமென நினைக்கிறேன். நான் இணைந்து சந்திப்பை ஏற்பாடு செய்ய விரும்பினாலும் நான் இருப்பது கண்டியில் என்பதாலும் அதிகமான பதிவர்கள் கொழும்பிலிருப்பதாலும் அது சாத்தியமில்லை என நினைக்கிறேன்.
இப்போதைக்கு சந்திப்பு நடாத்த இயலாவிட்டாலும், இரண்டாவது சந்திப்பில் கௌபோய் மது சொல்லியபடி “கூகுல் குழும அரட்டையில்” ஒரு சந்திப்பை நிகழ்த்தலாம் என நினைக்கிறேன்.
யாராவது ஏற்பாடு செய்யுங்களேன், சந்திப்போம்.
பி.கு. - இன்று பிறந்த நாளை கொண்டாடும் மூத்த பதிவர் கவிஞர் மேமன் கவி ஐயா அவர்களுக்கு எனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
உண்மைதான்...
நான் உட்பட பலர் அப்படியே ஓதுங்கியிருக்கிறோம்...
பலரை விசாரித்ததில் 'ஓய்வுபெறும்' முடிவாகக் கூட இருக்கிறது...
குழுமத்தில் சந்திப்பொன்றை நடத்துவது சிறப்பானது, உடனடியாக நடத்தப்படக்கூடியது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.
குழுமத்தில் இது தொடர்பாகக் கலந்துரையாடலாம்.
(எனது பெயர் தொடர்பாக, என்னால் முடிந்தளவு செய்கிறேன்.
பதிவர்கள் பலரின் எழுத்துக்களின் இரசிகன் நான். :) )
உண்மைதான் யோ அண்மைக்காலமாக ஒரு வரட்சி நம்ம பதிவர்களிடம் காணப்படுகின்றது பலர் ஏனோ எழுதுவதில்லை(நான் உட்பட). குழுமத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்தினால் சிலவேளைகளில் அனைவரும் உசாராகலாம் இல்லையென்றால் பேஸ்புக்கும் டிவிட்டரும் காணும் என நினைக்கின்றார்களோ தெரியவில்லை.
பதிவோடு உடன்படுகிறேன்
ஆமாங்க...! உண்மைதானுங்க...
உண்மைதான் சகோதரா...
என்ன கொடுமை சாரை பூனைக்கு மணி கட்ட அழைக்கின்றேன்... :-)
பதிவர் சந்திப்பு என்றால் ஏன் ஒரே formatஇல் யோசிக்கிறீர்கள்? சந்திப்பு தானே.. மாநாடு இல்லையே.. Dine out (Dinner Dance)மாதிரி, ஒரு cricket match மாதிரி அல்லது ஒரு நாள் trip மாதிரி செய்யலாம்.
ஒரு நாள் tripஎன்றால், கோரிக்கையை விடுத்த பதிவர்களை missபண்ணுகிற யோவின் வீட்டுக்கு lunchக்கும் போய் அப்படியே கண்டிய சுத்தி பாக்கலாம். யோவுக்கும் மனசு நிறஞ்ச மாதிரி இருக்கும்.
அதுசரி google இல் பதிவர் சந்திப்பு என்றால் கல்தோன்றி மண் தோன்றாத காலத்தில் பதிவெழுதி அதுக்குப்பிறகு பதிவே எழுதாத கிழடு கட்டைகள் எப்படி participate பண்ணும்? எப்பவும் அவங்களுக்குதானே முதல் மரியாத குடுப்பீங்க?
அடுத்தது பதிவர் சந்திப்பு முடிஞ்சா எல்லாரும் கொஞ்ச படங்கள போட்டு பதிவெழுதுவீங்க. அதுக்கப்புறம் ஆளுக்காள் கலாய்ப்பீங்க.. பிறகு இடைவெளி வரும். அத நீக்குறதுக்கு திரும்பி ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்வீங்களா?
ம..ம் நல்லதுதான் ..
எஸ்கர் என்றவன் தானும் வரமாட்டான் நடத்துகின்றவர்களையும் நக்கலடிப்பான் இவன் எல்லாம் ஒரு மனிதனா? சனியன் பிடித்தவன்
வந்துட்டேஏஏஏன்....
சில நாட்களாக யாழ்ப்பாணம், கொழும்பு என்று சுற்றியதால் அடியேன் இந்தப்பக்கம் வரவில்லை, பிறகு வீட்டுக்கு வந்தால் புது வீடு எனவே இணைய வசதி மாற்றப்படவில்லை.. இன்றுதான் இணையம் வந்தது, தவிர நான் ஓய்வெல்லாம் இல்லைங்கோ..
ஆம் பதிவர் சந்திப்பு, அதைத்தான் நானும் எதிர்பார்க்கிறேனுங்ணா, இடையிடையே நடந்த குட்டி சந்திப்புகளில் சில பதிவர்களை சந்தித்திருந்தாலும், இதுவரை ஒரு உத்தியோக பூர்வமான சந்திப்புகளிலும் கலந்துகொள்ளாத வருத்தம் இருக்கத்தான் செய்கிறது...;)
இது வரை எழுதிவந்த எனக்கும் ஒரு வேலை கிடைத்திருப்பதால் இப்போதைக்கு எழுதவரமுடியாதப்பா! மன்னித்துக் கொள்ளுங்கள்!
yaaldevi.com yaathra 2010
முதலாவது இணையத்தமிழ் மாநாடு யாழ்ப்பாணத்தில் வரும் வைகாசிமாதம் 16ம் திகதி (May 16 sunday)ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
சந்திக்க ஆவலாக உள்ளோம்.
கூடிய சீக்கிரம் சந்திப்போம் அது சரி அண்ணா எப்போ வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்ய போறீங்க???
அடுத்த சந்திப்பு எப்போ?
யோ வொய்ஸ், உங்க்ள் வலைப்பூவிற்கு நான் முதன் முதலில் விஜயம் செகின்றேன்.நன்றாக உள்ளது உங்கள் எழுத்துக்கள்.இனித் தொடர்ந்தும் வருவேன்.