விண்ணைத்தாண்டி வரும் சூர்யா

நான் நேற்று பொங்கலன்று பார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இரண்டு நிகழ்ச்சிகள் எனது மனதை கவர்ந்தன, அதில் முதலாவது சூர்யா ஏழை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு ஒரு கோடி பங்களித்த விஜய் டீவி நிகழ்ச்சி மற்றது விண்ணைத்தாண்டி வருவாயா இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஆகும். இவை இரண்டும் எனது மனதை கவர்ந்தற்கு பல காரணங்கள் உண்டு.



சூர்யா ஏழை மாணவர்களுக்கு ஒரு கோடி பண உதவி செய்ய முன் வந்த நிகழ்வில் கதைத்த மாணவர்களின் பேச்சை கேட்டு நான் உட்பட எங்கள் வீட்டில் அனைவரும் கண் கலங்கினோம், தானத்திலே சிறந்த தானம் கல்வித்தானம் என்பார்கள், அதை வழங்க உதவிய சூர்யாவுக்கு எனது வணக்கங்கள், அதை பார்த்த பின்னர் கட்டாயம் அவர்கது “அகரம் அறக்கட்டளைக்கு” ஏதாவது பொருள் உதவி செய்ய தோன்றியது. செய்ய நினைத்துள்ளேன், இப்பதிவை வாசிப்பவர்களில் யாருக்காவது அவ்வாறு தோன்றினால் அகரம் என்னும் இணையத்தளத்திற்கு சென்று விதை என்னும் இந்நிகழ்விற்கு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். எத்தனையோ நடிகர்கள் தையல் மெஷின், இலவச திருமணம் என செய்து புகைப்படம் எடுத்து பத்திரிகையில் போட்டு கொள்வதை விட்டு இந்நிகழ்விற்கு உதவுவது புண்ணியத்தை தரும். காரணம் அந்த ஏழை மாணவர்களின் பேச்சில் அவர்களது முன்னேற்றத்திற்கு பணம் மட்டுமே தடையாக இருப்பதாக குறிப்பிட்டார்கள்.

அடுத்து நான் பார்த்த நிகழ்ச்சி விண்ணைத் தாண்டி வருவாயா இசை வெளியீட்டு விழா. ஒஸ்கார் விருதுக்கு பின்னர் நம்ம தல ரகுமானின் இசையில் வெளி வந்த முதல் தமிழ் பாடல்கள். முதல் முறை கேட்கும் போதே மனதை கவர்ந்த பாடல்கள், கட்டாயம் இந்த வருடத்தில் இந்த ஆல்பம் சூப்பர் ஹிட் என்பதை வெளிப்படுத்தின. அதிலும் கார்த்திக் பாடிய பாடல், ஒமனக்குட்டி பாடல், மன்னிப்பாயா என்னும் ரகுமான் (நிகழ்வில் இதை பாடியது கார்த்திக்) பாடிய பாடலும் அருமையாக இருந்தன. இரண்டு பாடல்கள் காட்சிப்படுத்தியிருந்தார்கள், பாடல்களை தன்னை போல அழகாக யாராலும் காட்சியமைக்க முடியாது என மீண்டும் நிரூபித்திருந்தார் கௌதம் வாசுதேவ மேனன், மேலும் சிம்பு தனது வாலை சுருட்டிக் கொண்டு பாடல்காட்சிகளில் நடித்திருந்தார். படத்தில் எப்படியோ? இப்படியே படத்திலும் நடித்திருந்தால் மகிழ்ச்சியே.

சிம்பு, த்ரிஷா இருவரையும் மிக அழகாக காட்டியிருக்கிறார்கள். அதிலும் த்ரிஷாவை யாருமே இப்படி அழகாக காட்டியதில்லை எனலாம். எப்படியோ இந்த வருடம் ரகுமான் ரசிகர்ககளான எங்களுக்கு கொண்டாட்டம் தான்.


18 Responses
  1. சூர்யாவின் முயற்சி பாராட்டத்தக்கது...

    இப்படியான முயற்சிகள் நிச்சயம் ஊக்குவிக்கப்படத்தக்கன....


    விண்ணைத்தாண்டி வருவாயா...
    எங்கும் இதே பேச்சாகத்தான் இருக்கிறது....
    வீடியோ வந்து சொதப்பாமலிருந்தால் சரி தான்.... :)


  2. Bavan Says:

    நான் டிவி பார்ப்பது குறைவு அண்ணா, ஆனால் சூர்யாவின் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ****

    விண்ணைத்தாண்டி வருவாயா, பாட்டுக்கள் உண்மையிலேயே அருமை, ஹோசோனா என் பேஃவரிட்...


  3. //தானத்திலே சிறந்த தானம் கல்வித்தானம்//


    வானுக்கு அணிகலன் சந்திரன். பெண்ணுக்கு அணிகலன் கணவன். இராட்சியத்துக்கு அணிகலன் அரசன். கல்வியானது எல்லார்க்கும், எல்லாவற்றுக்கும் அணிகலனாகும்.

    உலகில் கல்விக்கு இணையாக எதுவுமே இல்லை.


  4. Subankan Says:

    சூர்யாவின் முயற்சி வரவேற்கப்படவேண்டியது.

    விண்ணைத்தாண்டி வருவாயா கலக்கல். பாடல்கள் கலக்கல். அதிலும் எனது ஃபேவரிட் ஹொசன்னா மற்றும் ஓமணப்பெண்ணே.

    //வீடியோ வந்து சொதப்பாமலிருந்தால் சரி தான்.... :)//

    வீடியோ வந்தால் இன்னும் அதிகம் ஹிட்டாகும். ARRஇன் பாடல்கள் அப்படித்தான்


  5. சூர்யாவின் முயற்சி வரவேற்கப்படவேண்டியது.உலகில் கல்விக்கு இணையாக எதுவுமே இல்லை.


  6. ம்ம் சூர்யவுக்குள் நல்ல நடிகர் மட்டுமல்ல நல்ல மனிதனும் இருக்கின்றான்.
    ஹோசன்னா எனக்கும் ரொம்பப் பிடித்தப் பாடல்


  7. A.V.Roy Says:

    நீங்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சியை நானும் பார்த்தேன்..எனக்கும் அந்த நிகழ்ச்சி பெரிய பாதிப்பை உருவாக்கியது. காரணம் நானும் அளவுக்கதிகமான அநாதை இல்லங்களையும் கல்வித் தேவை மிக்க சில மடங்களையும் நன்குணர்ந்தவன் கூட..அவர்கள் அங்கு செய்கின்றார்கள் என்றால் நாம் ஏன் இங்கு ஒரு சிறிய தொகையை கல்வித் தேவையுள்ள ஒரு மடத்திட்கோ, ஒரு இல்லதிட்கோ கொடுக்க கூடாது என்ற எண்ணம் தோன்றியது...???

    // "அதை பார்த்த பின்னர் கட்டாயம் அவர்கது “அகரம் அறக்கட்டளைக்கு” ஏதாவது பொருள் உதவி செய்ய தோன்றியது. செய்ய நினைத்துள்ளேன். //

    உங்களின் எண்ணம் பாராட்ட தக்கது...அதே நேரம் ஏன் நீங்கள் இங்குள்ள ஒரு உண்மையான மடத்திற்கு கொடுக்க முயற்சிக்க கூடாது??? உங்களின் நல்ல மனதிட்காகதான் இதை உங்களிடம் கேட்கிறேன். பிழையாக நினைத்துவிடாதீர்கள் ..
    சூர்யாவிற்கு விஜய் டிவி என்கிற ஊடகம் பெரிதும் உதவியது...நம்மவர்களுக்கு !!!!!


  8. அழகு என நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள்? அப்பவ த்ரிஸ் இவ்வளவு காலமும்..? சரியான விளக்கம் வேண்டும். த்ரிஸா ரசிகர் மன்றம். சரணங்கரா றோட்.

    மற்றது சுர்யா எப்பவுமே டொப் தான் எல்லா விசயத்திலும்.


  9. balavasakan Says:

    ஏ.ஆர்.ரஹ்மான் கலக்கிவிட்டார் பாஸ் நான் இதுவரை எத்தனை தடவை பாடல்களை கேட்டேன் என்று ஞாபகம் இல்லை ..சூப்பர்...


  10. ////கனககோபி said.....

    சூர்யாவின் முயற்சி பாராட்டத்தக்கது...

    இப்படியான முயற்சிகள் நிச்சயம் ஊக்குவிக்கப்படத்தக்கன....////

    கட்டாயம் ஊக்குவிக்கப்பட வேண்டும் கோபி


    ////விண்ணைத்தாண்டி வருவாயா...
    எங்கும் இதே பேச்சாகத்தான் இருக்கிறது....
    வீடியோ வந்து சொதப்பாமலிருந்தால் சரி தான்.... :)////

    சொதப்பாது கவலை வேண்டாம்


  11. //// Bavan said...

    நான் டிவி பார்ப்பது குறைவு அண்ணா, ஆனால் சூர்யாவின் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ****

    விண்ணைத்தாண்டி வருவாயா, பாட்டுக்கள் உண்மையிலேயே அருமை, ஹோசோனா என் பேஃவரிட்..////

    எனக்கும் அந்தப்பாடல் ரொம்ப பிடித்துள்ளது பவன்


  12. ////Atchu said...

    //தானத்திலே சிறந்த தானம் கல்வித்தானம்//


    வானுக்கு அணிகலன் சந்திரன். பெண்ணுக்கு அணிகலன் கணவன். இராட்சியத்துக்கு அணிகலன் அரசன். கல்வியானது எல்லார்க்கும், எல்லாவற்றுக்கும் அணிகலனாகும்.

    உலகில் கல்விக்கு இணையாக எதுவுமே இல்லை.////

    அதே தான் அச்சு, நீங்கள் சொல்வது சரி


  13. //// Subankan said...

    சூர்யாவின் முயற்சி வரவேற்கப்படவேண்டியது.

    விண்ணைத்தாண்டி வருவாயா கலக்கல். பாடல்கள் கலக்கல். அதிலும் எனது ஃபேவரிட் ஹொசன்னா மற்றும் ஓமணப்பெண்ணே.

    //வீடியோ வந்து சொதப்பாமலிருந்தால் சரி தான்.... :)//

    வீடியோ வந்தால் இன்னும் அதிகம் ஹிட்டாகும். ARRஇன் பாடல்கள் அப்படித்தான்//// ஆமாம் சுபாங்கன் ரகுமானின் வழமையாக பாடல்கள் வீடியோ வந்தவுடன் அதிகம் ஹிட்டாகும்


  14. ////நிலாமதி said...

    சூர்யாவின் முயற்சி வரவேற்கப்படவேண்டியது.உலகில் கல்விக்கு இணையாக எதுவுமே இல்லை.////

    ஆமாம் நிலாமதி அக்கா நீங்கள் சொல்வது சரிதான்


  15. /////தர்ஷன் said...

    ம்ம்
    சூர்யவுக்குள் நல்ல நடிகர் மட்டுமல்ல நல்ல மனிதனும் இருக்கின்றான்.
    ஹோசன்னா எனக்கும் ரொம்பப் பிடித்தப் பாடல்/////

    என் கருத்தும் அதேதான் தர்ஷன்


  16. @A.V.Roy

    உங்கள் கருத்திற்கு முற்றிலும் உடன்படுகிறேன் ரோய். கட்டாயம் நம்மவர்களுக்கும் உதவ வேண்டும், சூர்யாவை இங்குள்ள பலர் முன்னுதாரனமாக கொள்ளலாம்


  17. @ இலங்கன்

    என்னது என் காதலிக்கு நீங்கள் ரசிகர் மன்றம் வைக்க போகிறீர்களா? என்னிடம் அனுமதி வாங்க வேண்டும் மறந்து விட்டீர்களா?


  18. /////Balavasakan said...

    ஏ.ஆர்.ரஹ்மான் கலக்கிவிட்டார் பாஸ் நான் இதுவரை எத்தனை தடவை பாடல்களை கேட்டேன் என்று ஞாபகம் இல்லை ..சூப்பர்../////

    கலக்கிவிட்டார் இல்லை கலக்கோ கலக்கென்று கலக்கிவிட்டார் வைத்தியரே