நூடுல்ஸ்


ரொம்ப நாளைக்கு அப்புறம் பழையபடி பதிவெழுத வந்திருக்கிறேன். ரொம்ப நாள் நான் எழுதாமல் இருந்ததற்கு முக்கிய காரணம் எனது  கையில் ஏற்பட்ட ஒரு சிறு எழும்பு முறிவு. மோட்டார் சைக்கிளின் ஸ்டாண்ட்டை போட்டு அப்படியே ஒட்டி சென்று விழுந்து விட்டதால் ஏற்பட்ட எழும்பு முறிவு இப்போதான் ஓரளவுக்கு சரியாகியிருக்கிறது. அதனால் பதிவுலகிற்கு மீண்டு வந்துள்ளேன்.

நேற்று எனது பிறந்த நாளுக்கு பதிவுலக நண்பர்கள் பலர் வாழ்த்து தெரிவித்திருந்தனர், அவர்கள் அனைவருக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள்.



----------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------

ஜனாதிபதி தேர்தல் வருகிறது. எனக்கு எப்போதும் அரசியலில் எந்த விதமான ஆர்வமும் இருந்ததில்லை. ஆனாலும் எனக்கு உள்ள வாக்குரிமையை பாவிக்க வேண்டும், ஆகையால் யாருக்கு எனது (பெறுமதியான) வாக்கை அளிப்பது என சீக்கிரமாக முடிவெடுக்க வேண்டும். ஆனாலும் இப்போதைய காலத்தில் நிகழும் அரசியல் பேச்சு விளையாட்டுக்கள், விவாதங்கள் சிறந்த நேரப்போக்கிகளாக (Time Pass) இருக்கின்றன என்பது மறுக்கவியலாத உண்மை.
----------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------
கிரிக்கட் போட்டிகளில் அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா என்பன வருடத்தை சிறப்பான வெற்றியோடு ஆரம்பித்திருக்கின்றன.  பொன்டிங் சிறந்த மூன்றாம் இலக்க துடுப்பாட்ட வீரர் இல்லை என கருத்துக்கள் வந்த போது அந்த மனுஷன் கடைசி டெஸ்ட் போட்டியில் பட்டையை கிளப்பி தன்னை ஏன் இந்த தசாப்தத்தின் சிறந்த கிரிக்கட்டராக தெரிவு செய்தார்கள் என்பதை நிரூபித்து விட்டார்.

தசாப்தத்தின் சிறந்த கிரிக்கட் வீரர் என்னும் விருதுக்கு பொன்டிங் மிக சிறந்த தெரிவு. அணியின் வெற்றியில் பங்களிப்பு என்று பார்க்கையில் பொன்டிங்கோடு போட்டியிட யாருமே இல்லை என நினைக்கிறேன்.

----------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------

இன்று காலை நுவரெலியாவிலிருந்து கண்டி வரும் வரை வெற்றி எப் எம்மில் விடியல் கேட்டு கொண்டே வந்தேன். அதில் லோஷன் கேட்ட கேள்வியான எமக்கு காலையில் புத்துணர்ச்சி அளிப்பது என்ன?”  என்பதற்கு நான் எனக்கு எது புத்துணர்ச்சி அளிக்கிறது என எண்ணி பார்த்தேன்.

எனக்கு காலையில் எழும்பும் போதே பாடல்கள் கேட்க வேண்டும்எனது நாள் விடியல் நிகழ்ச்சியோடு தொடங்கி பின்னர் காலையில் குளிர் நீரில் குளிப்பதால் கிடைக்கும் புத்துணர்ச்சியோடு தொடங்குகிறது. இதில் ஏதாவது குறைவாக இருந்தால் அந்த நாள் எனக்கு குறையாகவே தோன்றும்.


இந்த த்ரிஷா படத்தை காலையிலேயே பார்த்தால் சும்மாவே புத்துணர்ச்சி கிடைக்கும். த்ரி்ஷாவுக்கு மாப்பிளை தேடுவதாக லோஷன் பதிவிட்டிருக்கிறார். நான் அதற்கு விண்ணப்பிக்க யோசித்துள்ளேன். எங்கு எப்படி விண்ணப்பிப்பது என லோஷன் தகவல் தந்துதவுவார் என நம்புகிறேன்.
----------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------
 பொங்கல் வெளியீடு படங்கள் எதுவும் இன்னும் பார்க்கவில்லை, ஆயிரத்தில் ஒருவன் மற்றும் குட்டி பார்க்க நினைத்துள்ளேன். ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்தவர்களின் கருத்துகளை கேட்டபின் படம் பார்க்கவிருந்த ஆர்வம் குறைந்து விட்டது.
----------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------
தமிழ் மணம் விருதுகளை பெற்றமைக்கு பதிவர்கள் வந்தியத்தேவன் மற்றும் லோஷனுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.





15 Responses
  1. வெறும் நன்றிகளைச் சொல்லித் தப்பிக்க முடியாது....
    அடுத்த பதிவர் சந்திப்புச் செலவுகளை நீங்களே ஏற்றுக் கொள்ளவதாகத் தகவல் பரவியுள்ளது.... உறுதிப்படுத்தவும்.

    அரசியல்?
    நமக்குத் தெரியாது, ஆனால் ஆர்வமுண்டு.... பார்ப்போம் என்ன நடக்கிறது என்று...

    பொன்ரிங் அந்த விருதுக்குத் தகுதியானவர் தான்... எந்தச் சந்தேகமும் இல்லை....


    த்ரிஷாக்கு விண்ணப்பிக்கப் போறீங்களா?
    ஏதோ அணில் கடிச்ச பழமோ ஏதோ எண்டு ருவிற்றரில ஒர கதை உலாவுது.... கவனமா இருங்கோ.....


    எலும்பு முறிவா?
    பதிவுலகத்திற்கு பெரிதாக தெரியாதே?
    இப்போது முழுமையாகக் குணமாகிவிட்டீர்களா?


  2. Yoga,
    Are you ok now?

    //எங்கு எப்படி விண்ணப்பிப்பது என லோஷன் தகவல் தந்துதவுவார் என நம்புகிறேன்.//

    வழமையாக இன்னொருத்தர் தானே "மாமா" என அழைக்கப்படுபவர். :P


  3. Bavan Says:

    அடுத்த சந்திப்புக்கு முன் பார்ட்டி தருவீங்கதானே?

    ***

    அரசியல்- என்னதான் நடக்கும் நடக்கட்டுமே... வேற என்ன செய்ய முடியும்...

    ***

    //தசாப்தத்தின் சிறந்த கிரிக்கட் வீரர் என்னும் விருதுக்கு பொன்டிங் மிக சிறந்த தெரிவு.//

    அதே.. அதே.. சச்சினின் சாதனையை முந்தினாலும் ஆச்சரியமில்லை என?

    //நான் அதற்கு விண்ணப்பிக்க யோசித்துள்ளேன்.//

    இந்த விடயம் நீங்கள் பதிவிட முன்னரே ருவிட்டரில் பரவி விட்டது.. பரப்பியவன் நான்தான்..ஹீஹீ

    ***

    தொடர்ந்து இனி நிறையப்பதிவுகள் வரும் எண்டுறீங்க என?

    நூடுல்ஸ் நல்லாயிருக்கு..;)


  4. யோகா இப்போ நலமாயிருக்கிறீர்களா?

    தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    இனிமேலாவது மோட்டார் சைக்கிள் ஸ்டாண்ட் எடுத்துவிட்டோமா இல்லையா என்று பார்த்துவிட்டு வண்டியை ஓட்டவும் இதுக்கு அலாரம் கூட இருக்கே யோகா அதுவாங்கி பொருத்திகொள்ளுங்கள்....


  5. மோட்டர் சைக்கிள் ஓடும் போது அவதானமாக இருங்கள் யோ.

    தேர்தல் நாளொரு வன்முறையாக தொடருகின்றது.

    நிச்சயமாக பொன்டிங் சிறந்த வீரர்தான் அதற்க்கு சாட்சி பாகிஸ்தானுடன் நடந்த இறுதி டெஸ்டில் அடித்த இரட்டைச் சதம்,

    காலையில் குளிப்பது புத்துணர்ச்சி தரும் ஆனால் நுவரேலியா குளிரில் குளிப்பது கஸ்டம் தான். திரிஷாவைப் பார்த்தால் எனக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதில்லை. அது சரி குளியல் திரிஷா என இரண்டையும் ஒன்றாக போட்டிருக்கின்றீர்கள் உள்குத்தா?

    நானும் இன்னும் எந்தப் படங்களும் பார்க்கவில்லை.

    வாழ்த்துக்கு நன்றிகள்.


  6. Anonymous Says:

    Belated Birthday Wishes..
    -
    -
    -
    -
    -
    -
    -
    -
    -
    You too ??!!??(abt Trisha..Sigh..)


  7. //இந்த த்ரிஷா படத்தை காலையிலேயே பார்த்தால் சும்மாவே புத்துணர்ச்சி கிடைக்கும். த்ரி்ஷாவுக்கு மாப்பிளை தேடுவதாக லோஷன் பதிவிட்டிருக்கிறார். நான் அதற்கு விண்ணப்பிக்க யோசித்துள்ளேன். //

    ஏது நம்ம அண்ணன் அத்தானாக போறாரா? ...


  8. @ கனககோபி

    சரி உங்கள் அனைவருக்கும் கட்டாயம் அடுத்தமாதம் 29ம் திகதி விருந்து வைக்கிறேன்..


  9. @ ஆதிரை

    இப்போது 90 வீதம் குணமாகிவிட்டேன், பரவாயில்லை இவரையும் மாமாவாக்கி விடுவோம்


  10. @ Bavan

    விருந்துக்கு கோபிக்கு சொன்ன பதிலை பார்க்கவும், மேலும் டிவிட்டரில் என் புகழை பரவ செய்தமைக்கு விஷேட விருந்து வைக்கவுள்ளேன், எங்கு என இடத்தை தெரிவு செய்து சொல்லவும்


  11. @ பிரியமுடன்...வசந்த்

    வாழ்த்துக்கு நன்றி வசந்த், நான் வழமையாக கவனமாக தான் செல்வேன், அன்று நான் சைக்கிளில் போய் கொண்டிருக்கும் போது தொலைபேசியில் குறுஞ்செய்தி மணியடித்தது, அதை பார்த்துவிட்டு மீண்டும் செல்கையில் ஸ்டாண்டை எடுக்க மறந்து விட்டேன்..


  12. @ வந்தியத்தேவன்

    உள்குத்து வெளிக்குத்து கும்மாங்குத்து எதுவுமில்லை, ஏன்யா அதையெல்லாம் நினைவுபடுத்துறீங்க...


  13. @முகிலினி

    thank you very much for the wishes...


  14. @ இலங்கன்

    என்னா த்ரிஷா உங்க அக்காவா? சொல்லவேயில்லை...

    அப்ப நீங்க எனக்கு மச்சான்


  15. இந்த விபத்துகளுக்கு காரணம் தொல்லை பேசி என்கிறார்கள் பார்த்து ......அண்ணா. தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்ன அணில்கடிச்ச பழமா.......? அவைகள் பார்க்க தான் அழகு பல்லாயிரம் பேர் பார்த்த அவர்கள் தான் வேண்டுமா ..? வாழ்த்துக்கள். நலம் பெறவேண்டும். ....அழகிய மாங்க கனிகள் அருகே இருக்க ... ??...அடிக்கடி எழுத வாருங்கள்.