Showing posts with label சூர்யா. Show all posts
Showing posts with label சூர்யா. Show all posts

விண்ணைத்தாண்டி வரும் சூர்யா

நான் நேற்று பொங்கலன்று பார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இரண்டு நிகழ்ச்சிகள் எனது மனதை கவர்ந்தன, அதில் முதலாவது சூர்யா ஏழை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு ஒரு கோடி பங்களித்த விஜய் டீவி நிகழ்ச்சி மற்றது விண்ணைத்தாண்டி வருவாயா இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஆகும். இவை இரண்டும் எனது மனதை கவர்ந்தற்கு பல காரணங்கள் உண்டு.



சூர்யா ஏழை மாணவர்களுக்கு ஒரு கோடி பண உதவி செய்ய முன் வந்த நிகழ்வில் கதைத்த மாணவர்களின் பேச்சை கேட்டு நான் உட்பட எங்கள் வீட்டில் அனைவரும் கண் கலங்கினோம், தானத்திலே சிறந்த தானம் கல்வித்தானம் என்பார்கள், அதை வழங்க உதவிய சூர்யாவுக்கு எனது வணக்கங்கள், அதை பார்த்த பின்னர் கட்டாயம் அவர்கது “அகரம் அறக்கட்டளைக்கு” ஏதாவது பொருள் உதவி செய்ய தோன்றியது. செய்ய நினைத்துள்ளேன், இப்பதிவை வாசிப்பவர்களில் யாருக்காவது அவ்வாறு தோன்றினால் அகரம் என்னும் இணையத்தளத்திற்கு சென்று விதை என்னும் இந்நிகழ்விற்கு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். எத்தனையோ நடிகர்கள் தையல் மெஷின், இலவச திருமணம் என செய்து புகைப்படம் எடுத்து பத்திரிகையில் போட்டு கொள்வதை விட்டு இந்நிகழ்விற்கு உதவுவது புண்ணியத்தை தரும். காரணம் அந்த ஏழை மாணவர்களின் பேச்சில் அவர்களது முன்னேற்றத்திற்கு பணம் மட்டுமே தடையாக இருப்பதாக குறிப்பிட்டார்கள்.

அடுத்து நான் பார்த்த நிகழ்ச்சி விண்ணைத் தாண்டி வருவாயா இசை வெளியீட்டு விழா. ஒஸ்கார் விருதுக்கு பின்னர் நம்ம தல ரகுமானின் இசையில் வெளி வந்த முதல் தமிழ் பாடல்கள். முதல் முறை கேட்கும் போதே மனதை கவர்ந்த பாடல்கள், கட்டாயம் இந்த வருடத்தில் இந்த ஆல்பம் சூப்பர் ஹிட் என்பதை வெளிப்படுத்தின. அதிலும் கார்த்திக் பாடிய பாடல், ஒமனக்குட்டி பாடல், மன்னிப்பாயா என்னும் ரகுமான் (நிகழ்வில் இதை பாடியது கார்த்திக்) பாடிய பாடலும் அருமையாக இருந்தன. இரண்டு பாடல்கள் காட்சிப்படுத்தியிருந்தார்கள், பாடல்களை தன்னை போல அழகாக யாராலும் காட்சியமைக்க முடியாது என மீண்டும் நிரூபித்திருந்தார் கௌதம் வாசுதேவ மேனன், மேலும் சிம்பு தனது வாலை சுருட்டிக் கொண்டு பாடல்காட்சிகளில் நடித்திருந்தார். படத்தில் எப்படியோ? இப்படியே படத்திலும் நடித்திருந்தால் மகிழ்ச்சியே.

சிம்பு, த்ரிஷா இருவரையும் மிக அழகாக காட்டியிருக்கிறார்கள். அதிலும் த்ரிஷாவை யாருமே இப்படி அழகாக காட்டியதில்லை எனலாம். எப்படியோ இந்த வருடம் ரகுமான் ரசிகர்ககளான எங்களுக்கு கொண்டாட்டம் தான்.