நூடுல்ஸ்
ரொம்ப நாளைக்கு அப்புறம் பழையபடி பதிவெழுத வந்திருக்கிறேன். ரொம்ப நாள் நான் எழுதாமல் இருந்ததற்கு முக்கிய காரணம் எனது கையில் ஏற்பட்ட ஒரு சிறு எழும்பு முறிவு. மோட்டார் சைக்கிளின் ஸ்டாண்ட்டை போட்டு அப்படியே ஒட்டி சென்று விழுந்து விட்டதால் ஏற்பட்ட எழும்பு முறிவு இப்போதான் ஓரளவுக்கு சரியாகியிருக்கிறது. அதனால் பதிவுலகிற்கு மீண்டு வந்துள்ளேன்.
நேற்று எனது பிறந்த நாளுக்கு பதிவுலக நண்பர்கள் பலர் வாழ்த்து தெரிவித்திருந்தனர், அவர்கள் அனைவருக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள்.
----------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------
ஜனாதிபதி தேர்தல் வருகிறது. எனக்கு எப்போதும் அரசியலில் எந்த விதமான ஆர்வமும் இருந்ததில்லை. ஆனாலும் எனக்கு உள்ள வாக்குரிமையை பாவிக்க வேண்டும், ஆகையால் யாருக்கு எனது (பெறுமதியான) வாக்கை அளிப்பது என சீக்கிரமாக முடிவெடுக்க வேண்டும். ஆனாலும் இப்போதைய காலத்தில் நிகழும் அரசியல் பேச்சு விளையாட்டுக்கள், விவாதங்கள் சிறந்த நேரப்போக்கிகளாக (Time Pass) இருக்கின்றன என்பது மறுக்கவியலாத உண்மை.
----------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------
கிரிக்கட் போட்டிகளில் அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா என்பன வருடத்தை சிறப்பான வெற்றியோடு ஆரம்பித்திருக்கின்றன. பொன்டிங் சிறந்த மூன்றாம் இலக்க துடுப்பாட்ட வீரர் இல்லை என கருத்துக்கள் வந்த போது அந்த மனுஷன் கடைசி டெஸ்ட் போட்டியில் பட்டையை கிளப்பி தன்னை ஏன் இந்த தசாப்தத்தின் சிறந்த கிரிக்கட்டராக தெரிவு செய்தார்கள் என்பதை நிரூபித்து விட்டார்.
தசாப்தத்தின் சிறந்த கிரிக்கட் வீரர் என்னும் விருதுக்கு பொன்டிங் மிக சிறந்த தெரிவு. அணியின் வெற்றியில் பங்களிப்பு என்று பார்க்கையில் பொன்டிங்கோடு போட்டியிட யாருமே இல்லை என நினைக்கிறேன்.
----------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------
இன்று காலை நுவரெலியாவிலிருந்து கண்டி வரும் வரை வெற்றி எப் எம்மில் விடியல் கேட்டு கொண்டே வந்தேன். அதில் லோஷன் கேட்ட கேள்வியான ”எமக்கு காலையில் புத்துணர்ச்சி அளிப்பது என்ன?” என்பதற்கு நான் எனக்கு எது புத்துணர்ச்சி அளிக்கிறது என எண்ணி பார்த்தேன்.
எனக்கு காலையில் எழும்பும் போதே பாடல்கள் கேட்க வேண்டும், எனது நாள் விடியல் நிகழ்ச்சியோடு தொடங்கி பின்னர் காலையில் குளிர் நீரில் குளிப்பதால் கிடைக்கும் புத்துணர்ச்சியோடு தொடங்குகிறது. இதில் ஏதாவது குறைவாக இருந்தால் அந்த நாள் எனக்கு குறையாகவே தோன்றும்.
இந்த த்ரிஷா படத்தை காலையிலேயே பார்த்தால் சும்மாவே புத்துணர்ச்சி கிடைக்கும். த்ரி்ஷாவுக்கு மாப்பிளை தேடுவதாக லோஷன் பதிவிட்டிருக்கிறார். நான் அதற்கு விண்ணப்பிக்க யோசித்துள்ளேன். எங்கு எப்படி விண்ணப்பிப்பது என லோஷன் தகவல் தந்துதவுவார் என நம்புகிறேன்.
----------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------
பொங்கல் வெளியீடு படங்கள் எதுவும் இன்னும் பார்க்கவில்லை, ஆயிரத்தில் ஒருவன் மற்றும் குட்டி பார்க்க நினைத்துள்ளேன். ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்தவர்களின் கருத்துகளை கேட்டபின் படம் பார்க்கவிருந்த ஆர்வம் குறைந்து விட்டது.
----------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------
தமிழ் மணம் விருதுகளை பெற்றமைக்கு பதிவர்கள் வந்தியத்தேவன் மற்றும் லோஷனுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.