இந்திய ஆஸ்திரேலிய அணிகளுகிடையிலான டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்து விட்டன... யாராலும் வெல்ல முடியாத அணி என பெயரெடுத்துள்ள மன்னிக்கவும்.... பெயரெடுத்திருந்த ஆஸ்திரேலிய அணியை இந்திய 2-0 என வெற்றி கொண்டது.. ஆசியர்களான எமக்கு சந்தோசத்தை தரும் விடயமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை,
பல காரணங்களுக்காக இப்போட்டி தொடர் பலராலும் மறக்க முடியாது,
கங்குலி, கும்ப்ளே (சில வேளை டிராவிட்) விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டி தொடர், இனி இந்திய அணியின் Fab 5 என இருந்தது இனி Fab 3 (டிராவிட்டை அணியை விட்டு நீக்காமல் இருந்தால் அல்லது அவராகவே அண்ணியை விட்டு நீங்காமல் இருந்தால்) அல்லது Fab 2 என மாற வேண்டிய நிலை உள்ளது, ஆனால் இந்திய அணியின் பேட்டிங் இன்னும் நல்ல நிலைமையில் தான் இருக்கிறது, காம்பிர், விஜய், மிஸ்ரா என புதிதாக வந்தவர்களும் நல்ல போர்மில் இருப்பது இந்திய அணிக்கு சாதகமான விசயமாகவே நோக்க வேண்டும்...
உலக போலீஸ்காரன் அமெரிக்கா என்பது போல உலக கிரிக்கெட் தாதா, சண்டியர், முரடர்கள், etc.................. இன்னும் எப்படி வேண்டும்னாலும் நீங்கள் எழுதி கொள்ளுங்கள் என நினைத்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலியர்களுக்கு இது எப்படியும் ஒரு பெருத்த அவமானமாகவே இருக்கும், முக்கியமாக கவரி மான் பரம்பரையை சேர்ந்த ரிக்கி பாண்டிங்க்கு இந்த தோல்வி ரொம்ப கசப்பாகவே இருக்கும் என்பது நிச்சயம், கடைசி டெஸ்ட் போட்டி மட்டும் ஆஸ்திரேலியாவில் நடந்திருந்தால் எப்படியும்
நடுவர்கள் துணை கொண்டாவது வெற்றி பெற்றிருப்பார்கள்... சென்ற முறை கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியர்கள் விளையாடிய விதம் எல்லாருக்கும் நினைவு இருக்கலாம்...
இந்திய அணிக்கு இந்த தொடரில் முக்கியமாக ஆக்ரோஷமான அணி தலைவர் ஒருவர் கிடைத்துள்ளார், கங்குலிக்கு பிறகு இந்திய அணிக்கு துணிச்சலான ஒருவர் தலைமை பொறுப்பை எடுத்துள்ளார், எனக்கு Mark Taylor மற்றும் Sharne Warne இருவரின் காப்டன்ஷிப் ரொம்ப பிடிக்கும் Attacking Captains, இப்போ ரொம்ப நாளைக்கு பிறகு இந்த மாதிரி ஒரு கேப்டன் கிடைத்துள்ளார்....
இப்படி பல காரணம் இருந்தாலும் இன்னொரு விடயத்தினாலும் இப்போட்டி தொடர் முக்கியமானது, நீண்ட நாளைக்கு பிறகு ஹர்பஜன் சிங்க் போட்டி தடை, தண்டம், எச்சரிக்கை இல்லாமல் முடித்துள்ளார் அதுவும் அவரது பரம வைரி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக.....
நீண்ட காலமாக விளையாடி வந்த கங்குலி, கும்ப்ளே (டிராவிட்ஐயும் சேர்க்க வேண்டி வரலாம்) வாழ்த்தி வழி அனுப்பி வைப்போம், புதிதாக வந்துள்ள விஜய், மிஸ்ரா போன்றோரை வரவேற்போம்.