ICC WORLD T-20 வெற்றி கிண்ணம் யாருக்கு?
தென்னாபிரிக்கா, இந்தியா மட்டுமல்ல மேற்கிந்திய தீவுகளும் இந்த முறை ஒரு கை பார்த்துவிடுவது என இறங்கி இருப்பது தெரிகிறது. அவர்களது பந்து வீச்சு கொஞ்சம் யோசிக்க வைத்தாலும், கிறிஸ் கெய்ல் பெரிதாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காமலும் பிரபல இந்திய அணியை வெற்றி கொண்டது, கவனத்தை அவர்கள் பக்கம் ஈர்த்துள்ளது. Group of Death எனப்படும் மிக கஷ்டமான குழுவிலிருந்து ஆஸ்திரேலியாவை வெளியேற்றி இந்தியாவுக்கும் அரை இறுதி வாய்ப்பை யோசிக்க வைத்துள்ளார்கள். இந்த அணியின் வெற்றிக்கு பிராவோ, கெய்ல். சிம்மொண்ட்ஸ், எட்வர்ட்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இவர்களது பலவீனம் களத்தடுப்பு.
நேற்றைய முதல் போட்டியை பார்த்தவர்களுக்கு தெரியும் நம்ம இலங்கை எவளவு சிறப்பாக விளையாடினார்கள் என்று, கஷ்டமான நிலைமைகளிலும் இறுக்கமாக விளையாடி போட்டியில் வென்றார்கள். டில்ஷான் தொடர்ந்து அணிக்கு சிறந்த ஆரம்பத்தை வழங்கி கொண்டிருக்கிறார். சனத் ஜயசூரியவும் தன பங்குக்கு
பந்துவீச்சாளர்களை நிலை குலைய வைக்கிறார். அதிலும் "டில்ஷான் ஸ்பெஷல்" எனப்படும் விக்கெட் கீப்பர் தலைக்கு மேலாக அடிக்கும் ஒரு புதிய அடியை அவர் கையாண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார். இலங்கை அணிக்கு கோப்பையை வெல்ல சாதகமான விஷயம் அவர்களது பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு (ஆசியாவின் மிக சிறந்த பீல்டிங் டீம் என வர்ணனையாளர்கள் நம்ம அணியை வர்ணிக்கிறார்கள்). பாதகமான விஷயம் கடைசி 5 ஓவர்களில் அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த தவறுவது. சமர சில்வாவுக்கு பதிலாக இந்திய சேரம் அல்லது மஹ்ரோப் அணிக்குள் உள்வாங்கப்பட்டால் அந்த குறையை அவர் போக்குவர் என நம்பலாம்.
பாகிஸ்தான் அணியை பற்றி சொல்லவே தேவை இல்லை. அவர்கள் அணியில் ஒற்றுமை இல்லை என்பது பார்க்கும் அனைவருக்கும் தெரிகிறது. மற்றும் யூனுஸ் கான் தன அணி வீர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக தெரியவில்லை. நேற்று இலங்கை அணி முதலில் வேக பந்துவீச்சாளர்களை அடித்து துவைத்த
போது அவர் ஸ்பின்னர்களுக்கு பவர் ப்ளே ஓவர்களில் பந்து வீச சற்று பயந்தார் என தெரிந்தது. அபிரிடியின் துடுப்பாட்டமும் இதே போல் தான் அவரை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அனுப்ப அவர்கள் யோசிக்கிறார்கள். இது அபிரிடியின் மனநிலையினை குழப்பி உள்ளதாக தெரிகிறது. ஏனேன்றால் ஒரு காலத்தில் இவரது அடிக்கு பயப்படாத பந்து வீச்சாளர்களே இல்லை எனலாம் , இந்த இடத்தில தான் டோனி சிறந்து விளங்குகிறார் தனது அணி எல்லா வீரர்களையும் நம்பி தட்டி கொடுத்து வேலை வாங்குகிறார்.
ஆனால் என்னதான் பெரிய அணியாக இருந்தாலும் இந்திய அணிக்கு சேவாக் இல்லாமல் இருப்பது ஒரு பெரிய குறை தான் அந்த மனுஷன் அடிக்க தொடங்கினால் பந்து வீச்சாளர்கள் கதி அவ்வளவு தான். பார்ப்போம் அடுத்து வரும் போட்டிகளில் ரோதித் ஷர்மா சேவாக் போல விளையாடுவாரா என. மேலும் அப்துல் ரசாக்கின் வருகை பாகிஸ்தான் அணியை வெற்றியின் பக்கம் அழைத்து செல்லுமா என்று.....?
Post a Comment