கமலா? விக்ரமா? அஜித்தா? அர்ஜுனா?
ஒரு மாதிரியாக T20 உலக கிண்ணம் இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. இந்த இரண்டு வாரத்தில் கிரிக்கெட் உலகில் தான் எத்தனை மாற்றங்கள்.
கிண்ணத்தை எதிர்பார்த்து வந்த பாண்டிங் அண்ட் கம்பெனி ஒரு மாட்சிலும் வெற்றி பெற முடியாமல் போனது, இந்த முறை கலக்குவார் என எதிர் பார்க்கப்பட்ட சைமோண்ட்ஸ் சீக்கிரமாகவே நாடு திரும்பினது, ஹாட் favorites ஆக இருந்த இந்தியா பங்களாதேஷ், அயர்லாந்து மட்ச்களில் மட்டும் வெற்றி. யாரும் எதிர் பார்காத அயர்லாந்து இரண்டாம் சுற்றுக்கு வந்தது. இதுவரையில் இந்தியர்கள் தலையில் தூக்கி வைத்து இருந்த தோனியை எல்லா இந்தியர்களும் சகட்டு மேனிக்கு விளாசுவது, எல்லாரும் முதல் சுற்றிலே வெளியேறும் என எதிர்பார்த்த பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகள் அரை இறுதி வரை வந்தது . இப்படி என்னவெல்லாமோ நடக்குது.
நான் இந்தமுறை அரை இறுதிக்கு வந்த அணிகளை நம்ம நடிகர்களோடு ஒப்பிட்டு பார்த்தேன். நன்றாகவே இருந்தது,அதை உங்களுக்கும் சொல்லுகிறேன், உங்களுக்கு பிடிச்சது என்றால் ஒரு ஓட்டை போட்டுட்டு போங்கள், இல்லை பிடிக்கலைனாலும் ஒரு ஓட்டை போட்டுட்டு போங்கள்.
ஹீ ஹீ
கமலஹாசன் - சவுத் ஆப்ரிக்கா
எல்லா விசயத்திலும் பெர்பெக்ட். ஆனால் எப்பவுமே முதல் இடத்துக்கு வர முடியாது.
விக்ரம் - ஸ்ரீ லங்கா
வித்தியாசமான முயற்சிகள். போராட்ட குணம், விட்டுகொடுகாத மனபான்மை.
அஜித் - பாகிஸ்தான்
"எப்ப வெல்லுவாங்க எப்ப தோப்பாங்க" அவங்களுக்கே தெரியாது.
அர்ஜுன் - வெஸ்ட் இண்டீஸ்
எப்பவுமே அடிச்சி தூள் பண்ணுறது தான் இவங்களுக்கு பிடிக்கும். அதுவும் ஸ்டைல் ஆக. சும்மா லொட்டு லொட்டு என தட்டுறது இவங்களுக்கு அறவே பிடிக்காது. வெற்றிகள் குறைவு என்றாலும், எல்லாருக்கும் பிடிக்கும்.
அய்யா நான் தான் ஃபர்ஸ்ட் வெறும் 4 அணிகளுடன் நிறுத்தினா எப்படி