ரொம்ப நாளாக பதிவு எதுவும் எழுதாமல் இருந்தேன், நம்ம கிரிக்கெட் பத்தி இப்ப எழுதலாம்னு தோணிச்சி, அதனால் தன எழுதுறேன். இலங்கை கிரிக்கெட் அணியை எப்பொழுதும் முக்கியமான தருணங்களில் ஆஸ்திரேலியாவை வெல்லும் ஒரு அணியாகவே நங்கள் பார்த்தும் வந்துள்ளோம், மேலும் Big Occasion Team எனவும் இலங்கை அணியை கூறுவார்கள். அதை நேத்து நம்ம இலங்கை அணி நிருபித்துள்ளது.
சங்ககார தான் தலைமை ஏற்று நடத்திய முதல் போட்டியிலேயே தனது பொறுப்பு வாய்ந்த துடுப்பாட்டத்தை வெளி காட்டினார் என்று தான் சொல்ல வேண்டும். டில்ஷான் IPL இல் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். கடந்த ஒன்றரை வருடங்களாக அவர் சூப்பர் போர்மில் இருந்து வருகிறார். மகேலே ரொம்ப எதிர்பார்த்த மாதிரியே சொதப்பி

னர். மகேல உங்கள் போர்ம் ரொம்ப முக்கியம். சமர சில்வா ஏன் தெரிவு செய்ய பட்டார் என்றே தெரிய வில்லை. அவரை விட அந்த இடத்துக்கு கபுகெதர அல்லது மஹ்ரோப் ரொம்ப பொருத்தமாக இருப்பார். ஜெஹான் முபாரக் நேற்று வாணவேடிக்கை காட்டினார். ஏன் அவரை அணியில் வைத்துள்ளார்கள் என கேட்டவர்களுக்கு அவர் நேற்று தனது துடுப்பால் பதில் சொன்னார். அதி வேக பந்துவீச்சாளர் லீ யின் பந்துகளை சிக்ஸர் நோக்கி விரட்டியது அவரின் திறமையை வெள்ளி காட்டியது.

பந்து வீச்சை பொறுத்தவரை நம்ம சுழல் வீரர்கள் கலக்கிடாங்கனு சொல்லலாம் ஆனால் வேக பந்து வீச்சாளர்களும் முக்கியமா மலிங்க மற்றும் புதிய கண்டுபிடிப்பு இசுரு உதான சூப்பர் ஆக பந்து
வீசினாங்க. உதான மிக துல்லியமாக ஸ்லோ பௌலிங் வீசுகிறார். அவர் பந்தை பிட்ச் பண்ணுவதில் இன்னும் consistency காட்டினால் நல்ல எதிர் காலம் இருக்கும். மாயஜால பந்து வீச்சாளர் மென்டிஸ் ஆஸ்திரேலியா அணியையும் கதி கலங்க வைச்சிட்டார்.
ஆஸ்திரேலியா கடந்த 2,3 தொடர்களில் Michel Johnsen ஐ நம்பி இருக்கிறது. இது அவர்களது துடுப்பாட்டம் எவ்வளவு கீழ் இறங்கி உள்ளது என்பதுக்கு சாட்சி. மேலும் சிறந்த ஒரு சுழல் பந்து வீச்சாளர் என்பது Shane Warne க்கு பிறகு அமையவே இல்லை. எப்படியோ வார்னே, ஹய்டேன், மகரத், கில்லி இல்லாத ஆஸ்திரேலியா அணி பல் புடுங்கிய பாம்பு தான்.
மற்றைய போட்டியில் அயர்லாந்து பங்களாதேஷ் அணியை வென்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இப்போதைக்கு ஸ்காட்லாந்து, பங்களாதேஷ், ஆஸ்திரேலியா அணிகள் அடுத்த சுற்றை இப்போதைக்கு இழந்துள்ள அணிகள் முக்கியமாக ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் அணிகள்

டெஸ்ட் விளையாடும் அணிகள். இதில் ரொம்ப முக்கியமானது ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டதை பெரும் என எதிர் பார்க்கப்பட ஒரு அணி.
எது வேண்டும்னாலும் நடக்கலாம் 20-20 போட்டிகளில், இன்று பாகிஸ்தான் அணிக்கு ரொம்ப முக்கியமான போட்டி. இன்று அவர்கள் வெல்ல வேண்டும் அடுத்த சுற்றுக்கு போக வேண்டும் என்றால் அவர்கள் வெற்றி பிரமாண்டமானதாக இருக்கவேண்டும்.
பார்ப்போம் இன்னும் என்னவெல்லாம் நடக்கும் என்று இந்த 20-20 கிரிக்கெ
ட் திருவிழாவிலே ....