நூடுல்ஸ்
நேற்றிரவிலிருந்தே நித்தியானந்தா பரமஹம்சர் என்ற கழிசடை சாமியாரை பற்றிய பதிவுகள், ருவிட்டுகள் இணையத்தில் அதிகளவில் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. தனிப்பட்ட ரீதியில் சன் டீவி இதற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பியதற்கு ஏதாவது அரசியல் காரணங்கள் இருக்கலாம், இருக்கவும் வேண்டும்.
இந்தளவிற்கு இப்படி பட்ட ஆட்களை சிகரத்தில் ஏற்றி வைப்பதும் ஊடகங்கள்தான், அவர்களை திடீரென்று அதால பாதளத்திற்கு தள்ளி விடுவதும் இதே ஊடகங்கள்தான். இப்போது பிரச்சினை சாமியாரோ, நடிகையே அல்ல. இந்த ஜென்மங்களின் காலை தொட்டு கையை தொட்டு வணங்கும் முட்டாள் பக்தர்கள்தான். சாமியாரின் பாலியல் தேவையை தனக்கு தேவைப்பட்ட ஒருத்தருடன் தீர்த்து கொண்டது ஒரு பெரிய குற்றமல்ல, காரணம் அந்தாளும் ஒரு சாதாரண மனிதர்தானே. அப்படி இருக்கும் போது ஏன் சாதாரண மனிதர்களை வணங்குகிறார்கள் என்பதுதான் இங்கு முக்கிய கேள்வி. மற்றபடி அடுத்தவர் படுக்கையறையில் நடப்பதை தொலைகாட்சியில் காட்டுவது என்பது அநாகரீகத்தின் உச்சக்கட்டம். ஆனால் சாதாரண மனிதனான ஒருத்தனை கடவுள் ஸ்தானத்திற்கு கொண்டு சென்றது யார் பிழை? முதல் பிழை ஊடகங்கள்தான் என்பது எனது கருத்து.
இந்த சாமியார் இவ்வளவு பிரபல்யமாவதற்கு எழுத்தூடகமான குமுதம் தனது வாசகர்களிடம் மன்னிப்பு கேட்குமா? சாதாரண ஆசா பாசம் கொண்ட மனிதனை கடவுளாக சித்தரித்துடன் மாத்திரமன்றி அவர்களுக்கு அறிவுரையும் வழங்க வழி ஏற்படுத்தி கொடுத்தற்காக தனது வாசகர்களிடம் மன்னிப்பு கேட்குமா?
இலங்கையிலும் அம்மா பகவான் பற்றிய கட்டுரைகள் தேசிய பத்திரிகைகளில் வெளி வந்து கொண்டிருக்கிறது. இது எவ்வளவு காலத்திற்கு என தெரியாது???
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய ஊடகமே போலி சாமியார்களை தலையில் தூக்கி வைத்து ஆடுவதா?
சாமிகளே உங்களது ஆசைகளை தீர்த்து கொள்வது பிழை என சொல்லவில்லை, தயவு செய்து மதத்தை வைத்து ஏமாற்றாதீர்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
யாராலும் எட்ட முடியாத ஒரு நாள் போட்டியொன்றில் இரட்டை சதம் பெறும் சாதனையை சச்சின் முறியடித்து ஒரு நாள் போட்டியில் 200 ஓட்டங்களை பெற்றுவிட்டார். பல கிரிக்கட் சாதனைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் சச்சின் இந்தளவிற்கு முன்னேறியதற்கு அவரது தன்னடக்கமும் ஒரு காரணம் என நினைக்கிறேன். 20 வருடங்களுக்கு மேலாக விளையாடி வரும் சச்சின் மற்றைய சமகால இந்திய வீரர்களை போல பிரச்சினைகளை சந்திக்காததும் அந்த மாபெரும் வீரரின் தன்னடக்கத்திற்கு சாட்சிகளாகும். தோனி கொஞ்சம் இடம் கொடுத்திருந்தால் சச்சின் இன்னொரு 20-25 ஓட்டங்களை எடுத்திருக்கலாம் என நினைக்கிறேன்
சச்சினின் பேட்டிங் சாதனைகளும் முரளியின் பந்து வீச்சு சாதனைகளும் நீண்ட காலத்திற்கு அழியாமலிருக்கும் என நினைக்கிறேன்.
ஐ.பி.எல் பணத்திருவிழா தொடங்க போகிறது. லலித் மோடி என்ற பண முதலைக்கு அடுத்த மாதம் நல்ல இலாபம் கொழிக்க போகிறது. ஐ.பி.எல்லின் மறுபக்கம் பற்றிய ஒரு பதிவு அடுத்த வாரம் போடலாமென நினைத்திருக்கிறேன்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சிலி நாட்டில் ஏற்பட்டிருந்த நிலநடுக்கத்தின் பயங்கரங்களை தொலைக்காட்சியில் பார்த்த போது 2012 படம் நினைவுக்கு வந்தது, இனியும் மனிதன் இயற்கையை எதிர்த்து தொழிற்படுவானாயின் எதிர்காலத்தில் பல இன்னல்களை சந்திக்க வேண்டி வரும்.
இலங்கை முன்னனி பதிவர்களின் பதிவுகள் சமீப காலமாக குறைந்து விட்டன, காரணம் என்னவென்று தெரியவில்லை. முக்கியமாக நம்ம வந்தியத்தேவனின் பதிவுகள் குறைந்தது எம்மை போன்று பின்னூட்ட கும்மியாளர்களுக்கு ஒரு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.
சந்தேகம் 1 - இனி மேல் வந்தி இலங்கை பதிவரா அல்லது இங்கிலாந்து பதிவரா? அவரை எப்படி அழைப்பது?
சந்தேகம் 2 - இங்கிலாந்திலிருப்பதால் இனி வந்தி ஆங்கிலத்தில் பதிவெழுதுவதாக முடிவெடுத்துவிட்டாரோ?

