ஆதவன் - பதிவர் பார்வையில்
பார்க்க வேண்டும் என நினைத்திருந்து ஆதவன் படம் பார்த்துவிட்டேன். பதிவர்கள் எல்லாரும் விமர்சனம் எழுதியிருப்பதால் நான் விமர்சனம் எழுதாமல் நிறை குறைகளை எழுதுகிறேன்.
நிறைகள்
நகைச்சுவை திலகம் வடிவேல் கதாநாயகனாக நடித்து இந்திரலோகத்தில் நா அழகப்பனுக்கு அடுத்து வெளிவந்திருக்கும் படம் ஆதவன். சூர்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு (ப்ரெண்ஸ் படத்துக்கு பிறகு என நினைக்கிறேன்) இரண்டாம் கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கிறது. வடிவேலு கதாநாயகனாக நடித்த படத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடி ஸ்ரேயா வாய்ப்பிழந்து போன வரலாறு அறிந்தும் இந்த படத்தில் சூர்யா இரண்டாம் கதாநாயகனாக நடித்திருப்பதற்கு வாழ்த்துக்கள்.
குருவி படத்தில் விஜய் பாய்வதை பதிவர்கள் கிண்டலடித்த கோபத்தால் சூர்யா படம் முழுக்க பாய்கிறார், பாய்கிறார் வாழ்வின் எல்லை வரை பாய்கிறார். இப்படி ஒருவர் பறக்கும் காட்சியில் ரிஸ்க் எடுத்து நடிப்பது முடியாத காரியம். கடைசிகாட்சியில் (எங்களுக்கு) கொட்டாவி வந்தாலும் பறந்தே வெற்றியும் பெறுகிறார். சூர்யா பறக்கும் ரகசியத்தை விஜயகாந்திடமிருந்து கற்றிருக்கிறார்.
பின்னணி இசையில் ணொய் ணொய் என மிரட்டியிருக்கும் ஹாரீஸ் அழகிய தமிழ் வார்த்தைகான ஹசலி பிசிலி, தேக்கோ போன்ற வரிகளை கொண்ட பாடல்களை தந்து படத்தின் வெற்றியில் உதவியிருக்கிறார். (ஏற்கனவே கேட்ட மாதிரி இருந்தால் அதற்கு அவர் பொறுப்பல்ல)
படத்தில் இறுதியில் புதுசா இரண்டு பேர் வாராங்க அவங்க வாரது படத்தோட கதைபோக்குக்கு ரொம்ப முக்கிய விடயமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. (அவங்க இரண்டு பேரும் அடுத்த படத்தில டைரக்டர் கம் ஹீரோ, தயாரிப்பாளர் கம் ஹீரோ வாக மாற இங்கே முன்னோட்டம் பார்த்திருக்கிறார்களோ?)
படத்தில் அடுத்தடுத்து வரும் விடயங்களை நாங்களே ஊகிக்க கூடியவாறு கதை எழுதிய ரமேஷ் கண்ணாவும் பாராட்டுக்குறியவரே
குறைகள்
முன்னைய படங்களான பில்லா. வில்லு போன்றல்லாது நயன்தாரா படம் முழுக்க போர்த்தி கொண்டு வருவது ரசிகர்களை கோபம் கொள்ள வந்துள்ளது.
படத்திற்கு சீரியசாக வருபவர்களையும் வடிவேலு சிரிக்க வைத்துவிட்டார் என்பதும் ஒரு குறையே.
இது போதும் இதுக்கு மேல என்னால முடியல.....