2010 ஆம் ஆண்டை வரவேற்போம், 2009ம் ஆண்டுக்கு நன்றி சொல்வோம்.
வழமைபோல டிசம்பர் 31ஆம் திகதி அன்று கடந்து வந்த வருடத்தை அசை போடுகிறேன். பொதுவாக ஒவ்வொரு வருடமும் சில தீர்மானங்கள் எடுப்பேன், மிஞ்சிப் போனால் ஜனவரியோடு அதை தொடர்வதில்லை, ஆனால் 2009ல் அவ்வையான பல தீர்மானங்களை தொடர்ந்திருக்கிறேன். தனிப்பட்ட ரீதியில் எனக்கு 2009 ம் ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டே...
எனும் வள்ளுவன் வாக்கிற்கு ஏற்ப எனக்கு நன்மைகளை தந்த 2009ம் ஆண்டிற்கு நன்றி சொல்கிறேன். ஆனாலும் நன்மை மட்டுமே எனக்கு கிடைத்தது என சொல்லவில்லை, 2010ம் ஆண்டுக்கு நான் எடுத்து செல்லும் நினைவலைகளில் நல்லவற்றை நிரப்பினால் கவலைகள் குறைவு. பல இழப்புக்களையும் இவ்வருடம் சந்தித்திருந்தாலும் அவற்றை மறந்து பெற்றவைகளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
தனிப்பட்ட ரீதியில் நான் இவ்வருடத்தில் பல சுய மைல்கற்களை எட்டியிருக்கிறேன். பல புதிய நட்புக்கள் கிடைத்திருக்கிறன.
மேலும் மிக கவலையான விடயம் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு டிசம்பர் 31ல் நுவரெலியா இல்லாத ஓரிடத்தில் இருக்கிறேன். இந்த வருட தொடக்கத்தில் கண்டி நகருக்கு தொழில் நிமித்தம் வந்த நான், இப்போது கண்டியிலேயே முழுவதுமாக தங்கி விட்டேன், ஆரம்பத்தில் தனிமை ரொம்பவும் வாட்டியது, அப்போதெல்லாம் எனது தனிமையை நான் கழித்தது பதிவுலகத்தில்தான்... வருடக்கடைசியில் அலுவலகத்தில் பதவிஉயர்வு, அதிக ஆணிகள், மற்றும் ஒரு சிறு மோட்டார் விபத்தில் கை வருத்தம் காரணமாக பதிவுலகத்திற்கு தற்காலிக ஓய்வு கொடுத்திருந்தேன். அடுத்து வரும் வருடத்தில் தொடர்ந்து பதிவுலகில் இருப்பேன் எனும் நம்பிக்கையுடன்......
”என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் - உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு”

எனக்கு கை கொடுத்த முகம் தெரிந்த/தெரியாத பதிவுலக நட்புகளுக்கு நன்றிகள் பலகோடி...
மேலும் பிறக்கவிருக்கும் புது வருடத்தில் மனிதனாக வாழ்வோம், மனிதத்தை மதிப்போம், மனிதனாக வாழ்வோம் என்னும் தீர்மானத்தோடு இருக்கிறேன்.
அனைவருக்கும்
இனிய ஆங்கில புது வருட நல் வாழ்த்துக்கள்
நீண்ட நாட்களுக்குப்பிறகு பதிவுலகில் சஞ்சரிக்கிறீர்கள், மகிழ்ச்சியாக உள்ளது.
இனிய ஆங்கிலப்பத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா..:)
happy new year......
இனிய ஆங்கிலப்பத்தாண்டு
வாழ்த்துக்கள்....
WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR
வாழ்த்துக்கள் அடுத்த வருடம் நிறைய எழுதுங்கள்.
மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள் யோகா.
மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்...
Happy new year friend........
I'm new to the blogging world.Do visit my blog and comment please .
http://illuminati8.blogspot.com/
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2010
என்றும் நட்புடன்...
http://eniniyaillam.blogspot.com/
Wish u a happy New Year 2010! :)
உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மேலும் பல பதிவுகளை இட வாழ்த்துகிறேன். நல்ல உடல் ஆரோக்கியமும் இனிய சம்பவங்களும் நல்ல மாற்றங்களும் வாழ்வில் வந்து வசந்தம் தரவேண்டும்.