பதிவர்களின் காதலர் தினம் - பகுதி 2

சென்ற வாரம் நான் எழுதிய (கிறுக்கிய) காதலர்களின் காதலர் தின கொண்டாட்டங்கள் பற்றிய “டணால்” அறிக்கையின் தொடர்ச்சி......


பதிவர் லோஷன்
இந்த வருட காதலர் தினத்தை பல காதலிகளோடு கொண்டாடிய பிரபல மூத்த பதிவர் லோஷன் அவர்கள் இரவு வீடு செல்ல நேரமாகியது, நேரம் சென்று வீட்டுக்கு வந்த லோஷனை அண்ணி “ஏன் லேட்?” என கேட்க , அதற்கு வெற்றி எப்.எம் இரண்டாவது வருட புர்த்தி கொண்டாட்டங்களில் நேரம் போய்விட்டதாக பொய் சொல்லி சமாளித்தாகவும் பட்சி கூறுகிறது.


கடந்த முறை 3 காதலிகளுடன் காதலர் தினத்தை கொண்டாடிய லோஷன் இம்முறை 5 காதலிகளுடன் காதலர் தினத்தை கொண்டாடியதாகவும் பட்சி சொல்லியது


பதிவர் புல்லட்
காதலர் தினத்தில் காதலி கிடைக்காத சோகத்தில் மனுஷன் கோவா படத்தை பார்த்து விட்டு நண்பரொருவருடன் முழு நாளும் கோல்பேசில் நேரத்தை போக்கியதாக தகவல். கலகல பார்ட்டியான மனுஷன் காதலி கிடைக்காத சோகத்தில் இப்போவெல்லாம் சீரியஸ் பதிவிடுவது அனைவரும் அறிந்ததே. 


மனுஷன் கோவா படம் பார்த்ததும், முன் வீட்டு நாணிப்பாட்டி புல்லட்டை காதலர்தினத்தன்று தேடியதும், நண்பரோடு பொழுதை போக்கியதும் ஒன்றுடனொன்று தொடர்பில்லாத விடயங்கள் என பட்சி கூறுகிறது.


பதிவர் வரோ
நட்சத்திர கலை விழா பதிவை சிறப்பாக எழுதி பதிவிட்டு தூங்கிய மனுஷன் காதலர் தினத்தன்று முழித்து பார்க்கும் போது கட்டிலை சுற்றி பல இளம் பெண்கள் இவருக்காக காதலர் தின அட்டைகளை நீட்டி கொண்டிருந்ததை கண்ட வரோ சந்தோஷம் தாளாமல் ஒரு பெண்ணை தெரிவு செய்து இவளை நாம் காதலியாக்கி கொள்ளுவோம் என நினைத்து அவளது காதலர் தின அட்டையை வாங்க கை நீட்டினார்.படார் என சத்தம் 


என்னவென்று பார்த்தால் இவ்வளவு நேரமும் கனவு கண்ட மனுஷன் காதலியை நோக்கி கை நீட்ட எத்தனித்ததில் கட்டிலில் தூங்கியவர் கீழே விழுந்து கால் சுளுக்கி கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பதிவர் பங்குச்சந்தை அச்சு


பங்குசந்தை பற்றி எழுதும் பதிவர் காதலி தேடி இலங்கைக்கும் மலேசியாவுக்கும் பறந்து பறந்து ஒருவாறு காதலி ஒருத்தியை தேடி கண்டுபிடித்து இருவரும் தாறுமாறாக காதலிக்க தொடங்கினர். பெரிய வியாபாரியான அப்பெண்ணுக்கும் நம்ம பதிவருக்கும் இடையில் ஏதொ ஒரு நிறுவன பங்குகளை வாங்குவதில் ஏற்பட்ட முறுகலில் கடந்த ஒரு வாரமாக இருவருக்கிடையிலான பேச்சுக்கள் ரத்து.  காதலியுடன் மௌன மொழியில் கதைத்து காதலர் தினத்தை கொண்டாடிய நம்ம பதிவர் இப்போதெல்லாம் வாயில் முணு முணுக்கும் பாட்டு வரி


“நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா கவலைப்படாதே கண்ணா கவலைப்படாதே”


இப்பாடலை இவர் கன்கொனுக்கு ஆதரவாக பாடுவதாக கன்கொன் கோபி நினைத்திருக்கிறார். உண்மையில் இது அவரே அவருக்காக பாடும் பாடலாகும்.


பதிவர் ஆதிரை
படம் காட்டும் பதிவரான (பதிவுலகில் சொல்கிறேன்) இவர் காதலர் தின கொண்டாட்டத்தை வேலைத்தளத்தில் காதலிகளுடன் விமர்சையாக கொண்டாடி விட்டு கிடைத்த பரிசுப் பொருட்களை யாருக்கும் காட்டாமல் ஒளித்து வைத்துள்ளதாகவும் அந்த பரிசு பொருட்களை கொண்டு செல்ல “கன்டெயினர் ” ஒன்றை தேடுவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.


பதிவர் கௌபோய் மது
மஜா பதிவர் என்றழைக்கப்படும் பதிவர் மது காதலர் தினத்தன்று மிஸ்ஸிங் இவரை பற்றி தகவல் சேகரிக்க சென்ற எமது குழுவும் மிஸ்ஸிங். 


யாராவது இவங்களை கண்டால் பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க
இப்பதிவு சிரிப்பதற்கு மாத்திரமே என்பதை கூறிக்கொண்டு, இந்த மொக்கை பதிவின் இரண்டாம் பாகத்தை எழுத சொல்லி டிவிட்டிய அனுதினனுக்கு நன்றி சொல்கிறேன். இவரை பற்றி அதிகம் தெரியாததால் இவரது கொண்டாட்டம் பற்றி எழுத முடியவில்லை, அனுதினனை பற்றி நன்றாக தெரிந்த யாராவது பின்னூட்டத்தில் இவரது காதலர் தின கொண்டாட்டத்தை பற்றி எழுதவும்


22 Responses
 1. ஆகா நல்லாய்த்தான் இருக்கு எங்க பக்கமும் வந்து பாருங்க நாங்களும் காதலித்துதான் கைப்பிடித்தோம்


 2. VARO Says:

  //பதிவர் வரோ
  நட்சத்திர கலை விழா பதிவை சிறப்பாக எழுதி பதிவிட்டு தூங்கிய மனுஷன் காதலர் தினத்தன்று முழித்து பார்க்கும் போது கட்டிலை சுற்றி பல இளம் பெண்கள் இவருக்காக காதலர் தின அட்டைகளை நீட்டி கொண்டிருந்ததை கண்ட வரோ சந்தோஷம் தாளாமல் ஒரு பெண்ணை தெரிவு செய்து இவளை நாம் காதலியாக்கி கொள்ளுவோம் என நினைத்து அவளது காதலர் தின அட்டையை வாங்க கை நீட்டினார்.படார் என சத்தம்


  என்னவென்று பார்த்தால் இவ்வளவு நேரமும் கனவு கண்ட மனுஷன் காதலியை நோக்கி கை நீட்ட எத்தனித்ததில் கட்டிலில் தூங்கியவர் கீழே விழுந்து கால் சுளுக்கி கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.//

  என்னா ஒரு வில்லத்தனம். என்னைச் சுற்றி பெண்களா?... மனசை கல்லாக்கிட்டு இருக்கிறம்.. வேணாம்… அழுதிடுவன்.

  உண்மையிலேயே எனக்கு கனவு வந்தது. பதிவர்களின் டிசைனிங்கை முடித்து விட்டு பிந்திப் படுத்தால், மறுநாள் ஆபீஸில் ஒரே மொய்ப்பு. (நித்திரை) யாரோ எனக்கு எதையோ தர நான் கை நீட்டி வாங்குகின்றேன். திடீரென சுதாகரித்துக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தேன். அந்தரத்தில் தொங்கிய என் கையை எவரும் பார்க்கவில்லை. அசடு வழிந்தது. என்னையறியாமல் நித்திரை படுத்திவிட்டது.


 3. ஹி ஹி...
  லோஷன் அண்ணாவின் பின்னூட்டத்திற்காகக் காத்திருக்கிறேன்...

  தொடர்பானவர்கள் அனைவரும் பின்னூட்டியதும் பின்னூட்டுகிறேன்.

  இப்போதைக்கு ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவிட்டுச் செல்கிறேன்...


 4. Bavan Says:

  //கடந்த முறை 3 காதலிகளுடன் காதலர் தினத்தை கொண்டாடிய லோஷன் இம்முறை 5 காதலிகளுடன் காதலர் தினத்தை கொண்டாடியதாகவும் பட்சி சொல்லியது//

  எ.கொ.சா.இ ஹிம்ம்ம்ம்ம்ம்ம்... #பெருமூச்சு

  ***
  //பதிவர் புல்லட்//

  // நண்பரொருவருடன் முழு நாளும் கோல்பேசில் நேரத்தை போக்கியதாக தகவல்//

  என்னாதுதுதுது? #அதிர்ச்சி

  //இப்போவெல்லாம் சீரியஸ் பதிவிடுவது அனைவரும் அறிந்ததே.//

  @புல்லட் அண்ணா -
  இந்த கோல்பேஸ் நண்பனை எந்த சமூக வலயத்தில வைத்திக்கிறீங்க....:p


  //பதிவர் வரோ//

  //கட்டிலில் தூங்கியவர் கீழே விழுந்து கால் சுளுக்கி கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன//

  ஹாஹா அவர் இன்று போன நூல் வெளியீட்டு விழாவில் ஒழுங்காக தன்னைப்படமெடுக்கவில்லை என்று தன் நண்பனுடன் கடிந்து கொண்டாராம், இதுக்கும் அதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ..:p

  ****

  //பதிவர் பங்குச்சந்தை அச்சு//

  //காதலி ஒருத்தியை தேடி கண்டுபிடித்து இருவரும் தாறுமாறாக காதலிக்க தொடங்கினர்.//

  என்னாதுது?? இது எப்ப நடந்தது,
  டேய் பவன் இதெல்லாம் தெரியாம இருந்திருக்கியே..ஹிம்ம்ம்

  //“நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா கவலைப்படாதே கண்ணா கவலைப்படாதே”//

  இந்தப்பாடலைப் போட அகில உலக தனுஸ் ரசிகர் மன்றத்தலைவர் பவனிடம் அனுமதி பெற்றீர்களா..:p

  ****

  //பரிசுப் பொருட்களை யாருக்கும் காட்டாமல் ஒளித்து வைத்துள்ளதாகவும் அந்த பரிசு பொருட்களை கொண்டு செல்ல “கன்டெயினர் ” ஒன்றை தேடுவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.//

  கன்டெனர் அளவு பரிசுப்பொருட்களை எங்கே ஒளிச்சு வச்சிருக்கிறார்??? #சீரியஸ்_சந்தேகம்..:p

  ****

  //அனுதினனை பற்றி நன்றாக தெரிந்த யாராவது பின்னூட்டத்தில் இவரது காதலர் தின கொண்டாட்டத்தை பற்றி எழுதவும்//

  அதுக்கென்ன..

  காதலர் தினத்துக்கு முதல்நாளிலிருந்து தன் ரயில் காதலியிடமிருந்து அழைப்பு வரும் வரும் என எதிர்பார்த்துக் காத்திருந்தவர், வழக்கம்போல தனது தொலைபேசிக்கு INCOMING வெட்டப்பட்டதை மறந்துவிட்டதால் காதலி கோல் எடுத்தாரா இல்லையா என்பது தெரியாமல் கவலையில் தொலைபேசியைப்பார்த்து அழுதுகொண்டிருக்கிறாராம்...:p


 5. உது அளாப்பி ஆட்டம்...
  என் வேலைத்தளத்தில் பெண்கள் இல்லையே...

  காதலர்தினத்தன்று வேலைத்தளம் செல்ல நானென்ன யோகாவா..?


 6. அடப்படுபாவி.. ஆடிக்கொருக்கா அம்மாவாசைக்கு ஒருக்கா பதிவு போடுறவனை பிடிச்சு ஒவ்வொருநாளும் பதிவு போடெண்டு சொன்னால்சீரியசாத்தான் பதிவு வரும்..:P

  அதுசரி நான் call பேசி நேரத்தை கழித்தேனா? இல்லை Galle Face இல் நேரத்தைக்கழித்தேனா? வடிவாகச்சொல்லவும்.. :P

  இவங்கள் என்னை Gay என்று கதையைக்கட்டுவதில் மும்முரமாயிருப்பதால் யாரையாவது கற்பழித்து புறூவ்பண்ணுவேன் என்று எதிர்பார்க்கிறார்களோ? டேய் மக்கள்ஸ்! நான் ரொம்ப உசார்ப்பா!

  மூணு கோடி பாஸ் மூணு கோடி..
  அது ஞாபகம் இருக்கும் வரை அரங்காது.. :P


 7. Subankan Says:

  இதையெல்லாம் விட பெரிய ஒரு காதல் கதை கேள்விப்பட்டேன். இவரும் இலங்கைப்பதிவர்தான். இலவுகாத்த கிளி போல யாரை'யோ' காத்துக்கொண்டிருந்திருக்கிறார். அது போய்விடவே இப்போது விரக்தியில் பேஸ்புக்கிலோ, சைடு பாரிலோ கையில் அரிவாளுடன் உலாவுவதாக காற்றுவாக்கில் அடிபடுகிறது. இவர் யார் என்றுதான் அறியமுடியவில்லை.


 8. அண்ணா என்னால் எழுதிய பதிவின் இறுதியில் எனக்கே ஆப்பு வைக்க பாப்பது சரியில்லை.....

  லோஷன் அண்ணா :-
  //கடந்த முறை 3 காதலிகளுடன் காதலர் தினத்தை கொண்டாடிய லோஷன் இம்முறை 5 காதலிகளுடன் காதலர் தினத்தை கொண்டாடியதாகவும் பட்சி சொல்லியது//

  என் குரு இந்த வித்தையிலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்...

  பதிவர் புல்லட்
  NO COMMENTS

  பதிவர் வரோ
  aவரோ அண்ணா பரவாயில்லை எங்கள் பதிவர் (பவன் இல்லை) நேரிலேயே அதிகமாக வாங்கி இருகின்றனர்...

  பதிவர் பங்குச்சந்தை அச்சு
  //பங்குசந்தை பற்றி எழுதும் பதிவர் காதலி தேடி இலங்கைக்கும் மலேசியாவுக்கும் பறந்து பறந்து ஒருவாறு காதலி ஒருத்தியை தேடி கண்டுபிடித்து இருவரும் தாறுமாறாக காதலிக்க தொடங்கினர். பெரிய வியாபாரியான அப்பெண்ணுக்கும் நம்ம பதிவருக்கும் இடையில் ஏதொ ஒரு நிறுவன பங்குகளை வாங்குவதில் ஏற்பட்ட முறுகலில் கடந்த ஒரு வாரமாக இருவருக்கிடையிலான பேச்சுக்கள் ரத்து. //


  அண்ணா நீங்க இன்னும் நல்லா பங்கு வச்சுருக்கற அக்காவா பார்த்து பிடியுங்கோ


  //இந்த மொக்கை பதிவின் இரண்டாம் பாகத்தை எழுத சொல்லி டிவிட்டிய அனுதினனுக்கு நன்றி சொல்கிறேன். இவரை பற்றி அதிகம் தெரியாததால் இவரது கொண்டாட்டம் பற்றி எழுத முடியவில்லை, அனுதினனை பற்றி நன்றாக தெரிந்த யாராவது பின்னூட்டத்தில் இவரது காதலர் தின கொண்டாட்டத்தை பற்றி எழுதவும் //


  இவர் மிக நல்லவராம்...வல்லவராம்... பெண்களை மதிக்கும் தானை தலைவனாம்...

  அண்ணா நல்லா இருக்கு ...


 9. bavan said:-
  ////அனுதினனை பற்றி நன்றாக தெரிந்த யாராவது பின்னூட்டத்தில் இவரது காதலர் தின கொண்டாட்டத்தை பற்றி எழுதவும்//

  அதுக்கென்ன..

  காதலர் தினத்துக்கு முதல்நாளிலிருந்து தன் ரயில் காதலியிடமிருந்து அழைப்பு வரும் வரும் என எதிர்பார்த்துக் காத்திருந்தவர், வழக்கம்போல தனது தொலைபேசிக்கு INCOMING வெட்டப்பட்டதை மறந்துவிட்டதால் காதலி கோல் எடுத்தாரா இல்லையா என்பது தெரியாமல் கவலையில் தொலைபேசியைப்பார்த்து அழுதுகொண்டிருக்கிறாராம்...:p//

  அடேய் நான் ஒண்டும் உன்ன மாற்றி இல்லடா... எங்களுக்கு incoming allways activate உங்களுக்கு எப்பவுமே not reachableதானே!!!!!


 10. @ தியாவின் பேனா
  வந்துட்டமில்ல. காதல் வாழ்க


 11. @ VARO

  அப்ப நான் சொன்னது உண்மைதான் என சொல்லுறீங்க


 12. @ கன்கொன் || Kangon

  வாங்க பின்னூட்ட சக்கரவர்த்தியே. மீண்டும் வாங்க


 13. @ Bavan
  அனுதினன் பற்றி சொல்லியதற்கு நன்றி


 14. @ ஆதிரை
  இம்முறை பலர் காதலர் தினத்தை சனி அல்லது திங்கட்கிழமைதான் கொண்டாடினர்..

  உங்களை போல


 15. @ புல்லட்
  அவ்வ்வ் 18வயதிற்கு மேற்பட்டவர்கள் கதைக்கும் விடயம் பற்றி சொல்ல எனக்கு தெரியாது. நான் ப.பா


 16. @ Subankan

  இந்த பின்னூட்டம் பார்த்தவுடன் அவர் படத்தை மாற்றி விட்டார். இப்ப என்ன செய்வீங்க? இப்ப என்ன செய்வீங்க?


 17. @ அனுதினன்

  வாங்க தானை தலைவரே. உங்கள பத்தி பவன் பிரிச்சி மேஞ்சுட்டார்.

  பி.கு. இந்நாட்களில் தலைவர் என்னும் வசனத்தை பாவிக்காதீங்க. அப்புறம் எது வேண்டுமானாலும் நடக்கலாம்


 18. Anonymous Says:

  அட பாவி லோஓஓஓஓஷன் அண்ணா, நீ இவ்வளவு மோசமா... ஐந்தாம் நம்பருக்கு அவமானம்.. போயும் போயும் 5 பெண்கள் தானா? அர்க்க்க்க்க்க்க் ஒரு எக்ஸ்ரா ஐந்து இருந்தால் தான் எங்களுக்கு மரியாதை... அப்படி சொல்லுவன் என்டு நினைக்கிறியாண்ணா? அண்ணியின்ட மொபைல் நம்பரை எனக்கு ஒருக்கா அனுப்புங்கோ யோகா....

  புல்லட் கோவா ஆள் என்டு எனக்கு எப்பவோ தெரியும்.. அதனால் தான அவன் பெண்களுக்கு எதிரா எழுதினவன். பழகுறதுக்கு உந்த பயல்கள் சேப் தெரியுமோ.. ஹி ஹி...

  ஆதிரை தாத்தாவுக்கு இந்த வயசிலும் காதலர் தினம் கொண்டாட வேணுமே.. அது சரி தாத்தா ஓரிரு நாள் என்பதற்கு உங்கள் டிக்சனரியில் என்ன கருத்து??!!?? ஏன் என்டால் எனக்கு ஒரு மெயில் வரவேணும்.. இன்னும் வரேல்ல... ஹம்ப்

  உந்த பவன் நல்ல பெடியன் என்டல்லே நினைச்சனான்.. கடவுளே...


 19. VARO Says:

  //bavan said...
  ஹாஹா அவர் இன்று போன நூல் வெளியீட்டு விழாவில் ஒழுங்காக தன்னைப்படமெடுக்கவில்லை என்று தன் நண்பனுடன் கடிந்து கொண்டாராம், இதுக்கும் அதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ..://

  நண்பி பவன்,
  கிப்பு வலைப்பதிவின் சொந்தக்காரி

  //இவங்கள் என்னை Gay என்று கதையைக்கட்டுவதில் மும்முரமாயிருப்பதால் யாரையாவது கற்பழித்து புறூவ்பண்ணுவேன் என்று எதிர்பார்க்கிறார்களோ? டேய் மக்கள்ஸ்! நான் ரொம்ப உசார்ப்பா!//

  உந்த சமாலிபிகேஷனை விட்டுட்டு ஏலுமெண்டா பண்ணிப்பாரும் ஓய்.. 20. கொக்கா மக்கா... மிஸ்ஸிங்கா... மிஸ்ஸே கிடைக்கவில்லை.. மிஸ்ஸிங்கா.. தனிய மிஸ்ஸிங்க் ஆகிறதவிட வீட்டை இருந்து பேசாமா.... (உங்களுக்கும் தெரியும் எண்டபடியால வசனத்தை முடிக்கவில்லை)

  ம்ம்ம்... நல்லாயிருக்கு கலாய்ப்பு..


 21. தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

  East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

  Have a look at here too..

  Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos