பதிவர்களின் காதலர் தினம் - பகுதி 1

காதலர் தின கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களை கட்ட தொடங்கியிருக்கின்றன. இலங்கையிலுள்ள நம் பதிவர்கள் இந்நிகழ்வுக்கு எப்படி தயாராகியிருக்கின்றனர் என்பது பற்றிய டணால் அறிக்கை (பகீர் அறிக்கை என பத்திரிக்கையில் வருவதால் இது டணால் அறிக்கை). தன் உயிர் பற்றி கூட சிந்திக்காது வேவு பார்த்து இக்கட்டுரையை எழுதுவது யோ 007....

பதிவர் சுபாங்கன்
”போன வருஷம் நாம ட்ரை பண்ணுன பிகர், இந்த முறை யார லவ்விட்டு இருக்கோ தெரியாது, எதுக்கும் நம்ம ஸ்பெஷல் ஹெயார் கட்டிங் செய்து யாரையாவது கவர் பண்ண பார்க்க வேண்டும்,” என பச்சை நிறத்தில் உடை தயார் செய்கிறார் கொழும்பு பல்கலைகழக காதல் மன்னன் ஐந்தறைப் பெட்டி சுபாங்கன்

 இவர் வருடம் முழுவதும் ட்ரை பண்ணிய கெம்பஸ் பிகர்களின் எண்ணிக்கை 250ஐ தாண்டுவதால் இம்முறை வேறு இடத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளார். இடம் நிச்சயமாக தெரியாததால் எங்கு சென்று இவருக்கு காதலர் தின வாழ்த்தட்டை வழங்குவது என இவரது காதலிகள் திண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

பதிவர் (இட்லி போய்) கோபி
”நம்ம லெவலுக்கு ஒரு ஐஸ்வர்யா ராய் வரும்” என இருந்த கோபிக்கு அபிஷேக் அவரை திருமணம் செய்த செய்தி சில நாட்களிற்கு முன்னரே தெரிய வந்ததால் அபிஷேக் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். வடை போனதால் கோவம் மற்றும் கவலையில் இருக்கும் கோபி ஏதாவது பெண்களின் ஹாஸ்டலை முற்றுகையிடலாம் என நம்ப தகுந்த வட்டாரங்களிடமிருந்து செய்தி வந்திருக்கிறது.

எதற்கும் கவனமாயிருங்கள் ஹாஸ்டல் பெண்களே....

பதிவர் பவன்
தனது படங்களை ரசித்து தினமும் காதல் கடிதம் எழுதும் பெண் ரசிகைகளிலிருந்து (ரசிகைகள் என்றாலே பெண்கள்தானே அப்புறம் என்ன பெண் ரசிகைகள் என யாரும் கேள்வி கேட்க கூடாது? அப்புறம் உங்களை பற்றியும் அவர் படம் போட்டுடுவார்) யாரையாவது தெரிவு செய்யும் யோசனையிலிருக்கும் இவர், திருகோணஸ்வரத்திற்கு வரும் யாரையாவது தெரிவு செய்யலாமா எனவும் யோசித்து வருகிறார்.

எதற்கும் நாம் கவனமாயிருக்க வேண்டும், மனுஷம் 15ம் திகதி எரிந்தும் எரியாமலும் வந்தாலும் வந்திடுவார்.

பதிவர் வந்தியத்தேவன்
இப்போது இங்கிலாந்திலிருக்கும் இவர் வெள்ளைக்கார பெண்களை கணக்கு செய்ய போய் சில பல உள் காயங்களுடன் வலம் வருவதாக தகவல். எனினும் எதற்கும் மனம் தளரா வந்தி அவர்கள் இங்கிலாந்தில் (தான் தனியாக மட்டும்) இருக்கையில் எடுக்கப்பட்ட படங்களை மூஞ்சிப்புத்தகத்தில் போட்டு உலகம் முழுவதும் காதலி தேடுகிறார்.

இப்போதைக்கு இவர் இங்கிலாந்து இளவரசி ஒருத்தருடன் காதல் வயப்பட்டிருப்பதாகவும், அதனால் பக்கிங்காம் அரண்மனையில் இவ்வருட காதலர் தினத்தை கொண்டாடவிருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. இவரது பழைய காதல் கதைகளை கேள்விப் பட்டால் மகாராணி இவருக்கு என்ன தண்டனை வழங்குவார் என இவரது பதிவுலக சகாக்கள் கவலையுடன் கலந்துரையாடி கொண்டிருக்கின்றனர்.
இங்கிலாந்தில் பதிவர் வந்தியில் 
முதுகில் வரையப்பட்டுள்ள இதயம்

மற்றைய பதிவர்களின் தகவல்கள் நாளை தொடரும்
22 Responses
 1. அண்ணாவின் பதிவு சூப்பர்.....

  //இவர் வருடம் முழுவதும் ட்ரை பண்ணிய கெம்பஸ் பிகர்களின் எண்ணிக்கை 250ஐ தாண்டுவதால்//

  அவர் எத்தினயில் பாஸ் ஆகினார் எண்டு சொல்லி இருக்கலாம்....

  //பதிவர் (இட்லி போய்) கோபி
  ”நம்ம லெவலுக்கு ஒரு ஐஸ்வர்யா ராய் வரும்”//

  தலைவர் இப்போது தமன்னா பக்கம் தாவி உள்ளதாக தகவல்.

  //பதிவர் பவன் இவர், திருகோணஸ்வரத்திற்கு வரும் யாரையாவது தெரிவு செய்யலாமா எனவும் யோசித்து வருகிறார்.//

  இது 100% உண்மை என்பதை அவரது ஊர் பதிவர் ஆகிய நான் உறுதி செய்கிறேன்.


  அண்ணா உங்களை பற்றி அடுத்த பதிவில் சொல்ல்விர்கள் போல ...lol

  நன்று அண்ணா ...நல்லா இருக்கு 2. அதுசரி உங்க காதல் கதை என்னாச்சு அண்ணாச்சி.... திருமணம் நடந்து விட்டதாக அறிந்தேன் உண்மையா? உங்களுக்கல்ல அவளுக்கு...


 3. கொலைவெறிப் பதிவர் யோ அண்ணா அவர்களே....
  நலமா?

  இரண்டாவதாகக் குறிப்பிட்ட பதிவரைத் தவிர மற்றவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டுகொண்டேன்...
  எனக்குத் தெரிந்தவரை உண்மையாகத்தானிருக்கின்றன...


  //பகீர் அறிக்கை என பத்திரிக்கையில் வருவதால் இது டணால் அறிக்கை//

  :)


  இப்படிக்கு,
  மொக்கைப் பதிவுகளில் சீரியஸ் பின்னூட்டமிட்டு பதிவிட்டவரை கடுப்பேத்துவோர் சங்கம்...
  எங்கள் சங்கத்திற்கு கிளைகள் கிடையாது...


 4. Bavan Says:

  ///எதுக்கும் நம்ம ஸ்பெஷல் ஹெயார் கட்டிங் செய்து யாரையாவது கவர் பண்ண பார்க்க வேண்டும்,///

  இப்போது அசல் பாத்திட்டு அதில வாற அஜித்தின் ஹெயார் ஸ்டைலை வெட்டச்சொல்லி தனது 2 இன்ச் முடியைக் கொண்டுபோய் சலூனில் பார்பரிடம் சொல்ல அவர் தும்புக்கட்டையால் அடித்துத் துரத்தியதாகத் தகவல்

  ******

  ///ஒரு ஐஸ்வர்யா ராய் வரும்” என இருந்த கோபிக்கு அபிஷேக் அவரை திருமணம் செய்த செய்தி சில நாட்களிற்கு முன்னரே தெரிய வந்ததால்///

  நல்லகாலம் ஐஸ் தப்பியது, இல்லை இந்த தாத்தாவுக்கு மனைவியாகி... பாவம்...:p

  ******

  //பதிவர் பவன்//

  இவன்தான் எல்லாருக்கும் போட்டியாம்..:p

  //காதல் கடிதம் எழுதும் பெண் ரசிகைகளிலிருந்து//

  ஆம்..ஆம்.. கடிதங்களை பழைய பேப்பர்கடைக்குப்போட்டால் தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் அவ்வளவு கடிதங்கள்..lol

  //யாரையாவது தெரிவு செய்யலாமா எனவும் யோசித்து வருகிறார்//

  இல்லை இல்லை நமக்கு எப்பவுமே எமா வட்சன் தான், so லண்டன் போகப்போகிறேன்..ஹீஹீ..;)

  ******

  //உலகம் முழுவதும் காதலி தேடுகிறார//

  இங்கிலாந்து மகாராணி இவரின் படங்களைப்பாத்து இவரைத்தேடுவதாகத் தகவல் (செய்தி- BBC)

  ///இவர் இங்கிலாந்து இளவரசி ஒருத்தருடன் காதல் வயப்பட்டிருப்பதாகவும்///

  அப்ப மகாராணியின் வாழ்க்கை???:p

  ///இங்கிலாந்தில் பதிவர் வந்தியில்
  முதுகில் வரையப்பட்டுள்ள இதயம்///

  அட நல்லாயிருக்கே..ஹீஹீ

  அடுத்த பதிவில் பலரை எதிர்பார்த்து கும்முவதற்கு வெயிட்டிங்..;)


 5. Subankan Says:

  ஏனய்யா முதலாவதாப் போட வேற பெயர் கிடைக்கலையா உங்களுக்கு?

  உங்கள் பதிவில் பொருட்குற்றம் இருக்கிறது


  2. எங்கள் கம்பஸ்சில் உள்ள ஃபிகர்களை மட்டுமல்ல, அங்கே கூட்டிக்கொண்டிருக்கும் ஆயாவையும் சேத்துக்கூட்டினைல்கூட 250 தேறுவது கஸ்டம்

  இப்படிக்கு,
  குற்றம் கண்டுபிடித்து பதிவிட்டவரை கடுப்பேத்துவோர் சங்கம்...
  எங்கள் சங்கத்திற்கும் வேறு கிளைகள் கிடையாது...


 6. Subankan Says:

  முதலாவது குற்றம் தவறவிடப்பட்டுவிட்டது

  1. நான் கொழும்புப்பல்கலைக்கழகம் அல்ல, மொரட்டுவை


 7. கற்பனை என்றாலும் பதிவு நல்லாத்தான் இருக்கு . சுபாங்க‌னுக்கு முத‌லிட‌ம் கொடுத்து காத‌ல் ம‌ன்ன‌னாக்கிய‌மைக்கு ந‌ன்றிக‌ள், ஆணாலும் காத‌லில் மூழ்கி முத்தெடுத்த‌ புல்ல‌ட், லோஷ‌ன் ஆதிரை ஆகியோரையும் ஒரு கை பார்த்திருக்க‌லாம். ப‌வ‌ன், க‌ங்கோன் என்னைப்போன்ற‌ ப‌ச்சிள‌ம் பால‌க‌ர்க‌ளை காத‌ல‌ர்க‌ள் ஆக்கிய‌மைக்கு க‌ண்ட‌ன‌ம்.


 8. //ப‌வ‌ன், க‌ங்கோன் என்னைப்போன்ற‌ ப‌ச்சிள‌ம் பால‌க‌ர்க‌ளை காத‌ல‌ர்க‌ள் ஆக்கிய‌மைக்கு க‌ண்ட‌ன‌ம்.//

  வந்தியண்ணா...
  நீங்க நல்லவரா கெட்டவரா? :P


 9. ஹேமா Says:

  உங்களுக்கும் வாழ்த்துக்கள் யோ.எங்க ஆளையே காணக்கிடைக்குதில்லையே.அவ்வளவு பிஸியோ !


 10. Bavan Says:

  /// கன்கொன் || Kangon said.
  வந்தியண்ணா...
  நீங்க நல்லவரா கெட்டவரா? ://

  அதானே வந்தியண்ணா நீங்க நல்லவரா கெட்டவரா?... (டொட்டடொட்டடொய்ங்... Background music போடவும்..:p)


 11. @ அனுதினன்

  பவனை பற்றி நான் சொல்லியது உண்மை என கூறியதற்கு நன்றி. சும்மா எமா வொட்சன் என பொடியன் ஊர ஏமாத்துறது உண்மைதானா?


 12. @ அண்ணாமலையான்

  நன்றிங்க வருகைக்கும் பின்னூட்டலுக்கும்


 13. @ சந்ரு

  உண்மைதான் சந்ரு, அந்த சோகக்கதையை யாரு உங்களுக்கு சொன்னது... எல்லாம் அந்த அபிஷேக் பயல் வந்து கொத்திட்டு போய்ட்டான்


 14. @ கன்கொன் || Kangon

  கொலைவெறிபதிவர் என நீங்கள் என்னை திட்டும்போதே நான் கூறியது அனைத்தும் உண்மை என விளங்கியது.


  நன்றி கறுப்பு நமீதா அவர்களே


 15. @ Bavan

  இந்த பதிவிற்கு டிவிட்டர் ஐடியா கொடுத்ததே நீங்கள்தானே.. எப்படியோ உண்மைகளை ஒத்து கொண்டவரை சந்தோஷம்தான்


 16. @ Subankan

  அப்ப அந்த ஆயாவையுமா சைட் அடிக்கிறீங்க சுபாங்ஸ்... சரி நீங்க மொரட்டுவை கிங் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.


 17. @ வந்தியத்தேவன்
  ஆணிகள் காரணமாக பலர் தப்பி விட்டனர், இன்னொரு வாய்ப்பு வராமலா போய்விடும்.. பார்க்கலாம்


 18. @ கன்கொன் || Kangon

  வந்தி ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரு


 19. @ ஹேமா

  ஆமாம் அக்கா நேரம் கிடைக்கவில்லை, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்


 20. பதிவு அருமை.. எங்க மிச்சம் யோ? குவிக்..:P

  வந்தியண்ணா..லோசண்ணா சரி.. அதிரையும் ஓரளவு சரி.. நாங்கள் எங்கப்பா மூழ்கி முத்தெடுத்தம்? ஏன் இந்த அபாண்ட குற்றச்சாட்டு? :P


 21. Anonymous Says:

  ஹா ஹா ஹா... சுபாங்கி உந்த 250 என்ன‌ புது கதை.. நான் நீங்கள் ஒரு அப்பாவி என்டு எல்லே நினைத்தனான்.. :))

  உவன் கோபிக்கு கலியாணம் என்டு மந்தி அண்ணா ஏதோ பதிவு போட்டார்... அந்த பெட்டை தான் ஆஷ்வர்யாவா? கோபி ஆஷ் போனால் என்ன உன்ட ரேன்ஞ்சுக்கு Sherlyn Chopra (She acted in Dil Bole Hadippa) கிடைப்பா.. டோன்ட்டு வொறீஈஈஈஈஈ...

  மந்தி அண்ணா எல்லாம் ஓல்ட்டுப்பா.. அவரை இந்த பாலகர்களுடன் சேர்க்கலாமோ.. (பழிக்கு பழி என்னை மலேசியா நுளம்பு என்டு புல்லட் பன்டிக்கு சொல்லி குடுத்ததுக்கு.. மற்றது நீங்கள் அனுப்பிய எந்த மெயிலும் எனக்கு கிடைக்கேல்ல..அவுட் பொக்சை செக்பண்ணுங்கோ)