சமிந்த வாஸ் - ஒரு வேக பந்து வீச்சு சகாப்தம்


Warnakulasuriya Patabendige Ushantha Joseph Chaminda Vaas என உலகத்திலேயே மிகவும் நீண்ட பெயரை கொண்ட கிரிக்கெட் வீரர் டெஸ்ட் போட்டிகளில் இன்று அவரது கடைசி பந்து வீச்சை வீசினார். அவர் தான் சமிந்தா வாஸ். அவரை பற்றிய ஒரு சிறு பதிவு.

நான் சிறுவனாக இருந்த காலங்களில் இலங்கை அணி 3 சுழல் பந்துவீச்சாளர்களை கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்தது. அப்போதைய வீரர்களில் அசங்க குருசிங்க, அர்ஜுன ரணதுங்க, சந்திக்க ஹத்துருசிங்க இப்படி யாராவது ப்ரோமதய விக்கரமசிங்க வுடன் ஆரம்ப பந்து வீச்சாளர்களாக இருந்து வந்தனர், அப்போதைய நேரங்களில் வாசிம் அக்ரம் உலகத்தையே தனது வேக பந்து வீச்சில் கலக்கி வந்தார், எங்களுக்கும் ஒரு இடது கை வேக பந்து வீச்சாளர் கிடைத்தால் எப்படி இருக்கும் என நினைத்து கொண்டிருந்த போது தான் சமிந்தா வாசின் அறிமுகம் அதுவும் அதே வாசிம் அக்ரம் விளையாடும் பாகிஸ்தான் அணிக்கேதிரகவே பாத்து வீச வைப்பு. அன்று முதல் இன்று வரை இலங்கை வேக பந்து வீச்சை சுமந்து வந்துள்ளார்.

இவரது சாதனைகள் சில

* உலகத்திலேயே மிக சிறந்த ஒரு நாள் பந்து வீச்சு பெறுதி 19 ஓட்டங்களை கொடுத்து 8 விக்கெட் எடுத்து ஆகும் இது ஜிம்பாபே அணிகேதிராக ஆகும்.
* ஒரு நாள் போட்டியின் முதல் 3 பந்து வீச்சிலேயே 3 விக்கட்டுகள் எடுத்து ஆகும், இந்த சாதனை வேறு யாருமே செய்தது இல்லை.
* மேற்கிந்திய தீவுகளுக்கு எதிர்ராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 26 விக்கெட்டுகள் எடுத்து, இது இலங்கை அத்தொடரை 3-0 என வெல்ல காரணமாக இருந்தது, அதோடு ஒரு போட்டியில் இவர் பெற்ற 14 விக்கெட்டுகள் இம்ரான் கானுக்கு பிறகு உப கண்டத்தில் இச்சாதனையை செய்த ஒரே வீரராக ஆக்கியது.
* 2004 இல் ICC முதன் முதலாக தெரிவு செய்த உலக டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளில் இடம் பிடித்திருந்தார்.
* இலங்கை முதன் முதலாக மேற்கிந்திய தீவுகளில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்ல மிக முக்கியமாக போட்டி முடிய பதினாறே நிமிடம் இருக்கையில் சகல விக்கெட்டுகளையும் இலங்கை பெற காரணமாக இருந்து 5 விக்கெட்டுகளை பெற்றார், அத்துடன் இப்போட்டியில் முதலாம் இனிங்க்சில் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களையும் பெற்றார்.
*இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 3085 ஓட்டங்களையும் 354 விக்கெட்டுகளையும் , ஒரு நாள் சர்வதேச
போட்டிகளில் 2025 ஓட்டங்கள் மற்றும் 400 கும் மேற்பட்ட விக்கெட்டுகளை பெற்ற ஒரே சகல துறை வீரர் இவர் மட்டும் தான்.
* முரளிதரனுக்கு பிறகு இலங்கை அணியின் பது வீச்சு சாதனைகள் அனைத்தையும் கொண்டுள்ள வீரர்.
* விஸ்டன் 2008 ஆம் ஆண்டு சிறந்த விளையாடும் 40 வீரர்களில் ஒருவராக தெரிவு செய்ய பட்டர்.

நாளையோடு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு விடை கொடுக்க போகும் இந்த மகத்தான வீரருக்கு எங்களை இவளவு காலமும் தன் விளையாட்டு திறமையால் மகிழ்ச்சியில் ஆழ்த்தியமிகு நன்றிகளையும், அவரது எதிர் காலத்துக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்வோம்.

** எதிர் காலத்தில் நேர்முக வர்ணனையளரகவோ, பயிற்றுவிப்பாளரகவோ உங்கள் சேவையை எதிர் பார்க்கிறோம்



2 Responses
  1. Admin Says:

    உங்கள் பதிவுகள் அருமை தொடருங்கள்....வாழ்த்துக்கள்.............


  2. வாஸின் சாதனைகள் என்றும் நிலைத்து நிற்கும்!