வருடம் 2070 இல் எழுதப்படும் ஒரு கடிதம்

" எனக்கு வந்த ஒரு ஈமெயில் இல், 2070 ஒரு தந்தை எழுதும் கடிதத்தை பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது, அதை எனக்கு புரிந்த விதத்தில் தமிழ் படுத்தியிருக்கிறேன், பிடித்திருந்தால் பின்னோட்டமும் ஓட்டும் போடுங்க தலைவா"









இது
2070 ஆம் ஆண்டு


நான் 50 வயதை எட்டி சற்று நாளாகின்றது , ஆனாலும் என் தோற்றம் கிட்ட தட்ட 85 வயதானவரை போல இருக்கின்றது... நான் சிறுநீரக (கிட்னி) வருத்தத்தால் ரொம்பவே அவதிபடுகிறேன். அதற்கு காரணம் நான் தேவையான அளவு நீரை அருந்தாமை ஆகும். இன்னும் ரொம்ப காலம் நான் உயிர் வாழ மாட்டேன் என கவலையாய் இருக்கிறது. ஆனாலும் நான் இந்த சமூகத்திலேயே ரொம்ப வயதானவன் என்கிற சந்தோஷமும் இருக்கிறது.

எனக்கு என் 5 வயது ரொம்பவே நன்றாக நினைவு இருக்கின்றது, அப்போதைய உலகம் ரொம்பவே வித்தியாசமானதும் கூட... பசுமையான நாட்கள் அவை.. பூங்காக்கள் நிறைய மரங்கள் இருந்தன. அழகான மலர் தோட்டங்களை எல்லா வீடுகளிலும் காணக்கூடியதாக இருந்தது. நான் அந்த நாட்களில் நான் அரை மணித்தியாலம் குளித்திருக்கிறேன். இப்போ நாங்கள் கனிப்பொருட்கள் நிரம்பிய எண்ணை மற்றும் டவல் மூலமாக தானே எங்கள் தோலை சுத்த படுத்தி கொள்கிறோம்...

அந்த காலங்களில் பெண்கள் தலையில் அழகான கூந்தல் இருந்தது, இப்போ தண்ணீர் கொண்டு சுத்த படுத்த முடியாததால் தலையை வழித்து கொண்டு மொட்டை தலை கொண்டவர்களாக அல்லவா இருக்கின்றோம். அந்த நாட்களில் என் தந்தை அவரது காரை குழாய் நீரை கொண்டு கழுவுவது வழக்கம், இதை என் மகனிடம் சொன்னால் நம்ப மறுக்கிறான், "நீரை இப்படி எல்லாம் வீணாக்குவார்களா" என என்னிடம் கேட்கிறான்.

எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது அந்த காலத்தில் "நீரை சேமிப்போம்" என சுவர் விளம்பரங்கள், துண்டு பிரசுரங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள் என எராளமான இடங்களில் விளம்பர படுத்தப்பட்டு இருந்தது, ஆனால் அப்போது தண்ணீர் என்பது அழிய கூடிய ஒன்றாக நங்கள் நினைக்கவில்லை. இப்போ ஆறுகள், ஓடைகள், குளங்கள், வாவிகள், நிலத்தடி தண்ணீர் எல்லாமே வறண்டு போய் விட்டது அல்லது அழிக்க பட்டு விட்டது.

உற்பத்தி துறை ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்து விட்டது, வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி விட்டது, இப்போதெல்லாம் உப்பிலிருந்து நீரை பிரித்தெடுக்கும் தொழில் சாலைகள் தான் வேலை தரும் முக்கிய நிறுவனங்களாக இருக்கிறன்றன, இவற்றிலும் அதிகமானோர் தனது சம்பளத்தின் ஒரு பகுதியாக குடிக்கும் நீரையே பெற்று கொள்கின்றனர்.

துப்பாக்கி முனையில் தண்ணீரை பறித்து கொண்டு போவது இப்போதெல்லாம் ரொம்பவே சகஜமாகி போய் விட்டது, உணவு என்பது 80% செயற்கை முறையானதாகவே இருக்கின்றது, முன்னெல்லாம் ஒரு நாளைக்கு 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியம் என கருதபட்டது, அனால் இப்போது எனக்கு 1/2 கிளாஸ் தண்ணீர் தான் வழங்கப்படுகிறது. நங்கள் இப்போதெல்லாம் பாவித்து வீசி எறியும் உடைகளையே பாவிக்கின்றோம், இது குப்பைகளை அதிகரித்து விட்டது.

குப்பை தொட்டிகள் போல் மலசலகூட கழிவுகளும் தொட்டிகளுக்கே போகும் மாதிரி தான் செய்து உள்ளோம், எனேன்றால் வேறு எந்த வகையிலயும் கழிவுகளை அகற்ற நீர் போதாமை என்கின்ற காரணத்தால் ஆகும்.

இப்போதைய மக்களின் வெளிப்புற தோற்றம் ரொம்பவே விகாரமடைந்து காணப்டுகின்றது, வயது போனவரை போன்ற தோற்றம், தோல் தடிப்படைதல், விகாரமான தோற்றம் என்பன மிகவுமே சாதரணமான விஷயங்களாகி போய் விட்டன, அல்ட்ரா வயலட் கதிர்கள் நேரடியாகவே தோலை தாக்குவதால் தோல் புற்றுநோய் என்பது மிகவும் சாதாரணமாகி போய் விட்டது. சிறுநீரக பாதிப்பு தான் இன்றைய கால கட்டத்தில் மக்களின் இறப்புக்கான முக்கியமான காரணம் ஆகும்.

தோல் கலங்களின் இறப்பால் இருபது வயதானவர்கள் எல்லாம் நாற்பது வயதானவரை போல தென்படுகின்றனர். விஞ்ஞானிகள் எல்லாரும் இதற்கு வேறு வழிமுறைகளை கண்டறிய இரவு பகல் பாராமல் போராடுகின்றனர் ஆனாலும் என்ன செய்ய தண்ணீர் என்பது செயற்கையாக உருவாக்க முடியாத ஒரு பொருளாகவே இன்னும் இருக்கின்றது, ஒட்சிசன் கூட இப்போ ரொம்ப குறைந்து உள்ளது காரணம் மரங்கள் மற்றைய தாவரங்கள் ரொம்ப குறைவடைந்ததால் ஆகும், இதன் காரணமாக அடுத்து சந்ததி புத்தி வளர்ச்சி குறைவடைய எராளமான வாய்ப்புகள் உள்ளன.

மனிதனின் இயல்பு நிலை மாற்றம் அடைய தொடங்கி விட்டது, விகார நிலை அடைய தொடங்கி பிறக்கும் குழந்தைகள் எல்லாம் விகாரமாகி எதோ ஒரு குறையுடனும், அவயவங்களில் பிரச்சினைகளுடனும் பிறக்கின்றன.

அரசாங்கத்துக்கு நாங்கள் சுவாசிப்பதுக்கு வரி கட்டுகிறோம், ஒரு நாளைக்கு எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒட்சிசனின் அளவு 137 m3 ஆகும். இந்த வரியை கட்டாதவர்களை அரசாங்கம் விசேட சுவாசிக்கும் பிரிவிலிருந்து வெளியேற்றி சாதாரண காற்றை சுவாசிக்கும் இடங்களுக்கு அனுப்புகின்றது, இங்கு மனிதனுக்கு சூரிய சக்தியில் மூலம் சுவாசிக்க காற்று வழங்க படுகிறது, இந்த பிரதேசத்தில் உள்ள காற்று மிகவும் தரமானதாக இல்லாவிட்டலும், உயிர் வாழ போதுமானதாக இருக்கும், மனிதனின் சராசரி ஆயுட்காலம் 35 வருடங்களாகும்.

இன்னும் மிக சில நாடுகளில் பசும் புல் வெளிகள் காடுகள் ஆறுகள் இருக்கின்றன அவை ஆயுதம் தரித்த ராணுவங்களால் பாதுகாக்க படுகின்றன. தண்ணீர் மிகவும் விலை உயர்ந்த பொருளாக மாறி விட்டது, இப்போதைக்கு தங்கம், வைரங்களை விட தண்ணீரே மிகவும் விலை உயர்ந்த பொருள் ஆகும். நான் வாழும் பிரதேசத்தில் எங்கயுமே ஒரு மரத்தை தானும் காண முடியாது, காரணம் இங்கு பெய்யும் அமில மழை.

இதற்கெல்லாம் காரணம் நங்கள் இயற்கையை பாதுகாக்காமல் விட்டதும் , அணு சக்தி பிரயோகமுமே ஆகும், எங்களை இயற்கையை பாதுகாக்க சொல்லி எராளமாக எச்சரிக்க பட்டோம், ஆனாலும் நங்கள் யாருமே அதை பற்றி சிந்திக்கவில்லை, என் மகன் என் காலத்தை பற்றி கேட்கும் போது பசும் புல் வெளிகள், மலர்களின் அழகு, மழை, நீச்சல், ஆறுகளிலும் குளங்களிலும் உள்ள மீன்கள் எவ்வளவு தேவையோ அவ்வளவு நீரை குடிக்கும் வசதி, மனிதர்கள் எவளவு சுக தேகியாக வாழ்ந்தார்கள் என எல்லாம் கூறினேன்

அடுத்து என்மகன் கேட்டான் "இப்போ ஏன் அப்படி தண்ணீர் இல்லை?" என, பதில் சொல்ல முடியாமல் என் தொண்டையிலுள்ள உள்ள தண்ணீர் வற்றி விட்டது, ...

காரணம் தண்ணீரை வீணாக்கி இயற்கையை அழித்து, இப்போதைய இந்த தண்ணீர் இல்லா காரணத்துக்கு மூலமான சந்ததியை சேர்ந்தவன் என்ற முறையில், பதில் சொல்ல வார்த்தை இல்லாமல் வெட்கி தலை குனிந்தேன். நாங்கள் செய்த தப்புக்கு எங்கள் பிள்ளைகள் பெரிய விலையை கொடுக்கிறார்கள். இப்போதைக்கு மனிதனின் வாழ் நாள் குறைந்ததுக்கு நானும் காரணம் என்பது மட்டும் எனக்கு நிச்சயமாக தெரியும்

இதை வாசிப்பதால் யாராவது ஒரு நிமிடம் இயற்கையை அழிப்பதில் நமக்கும் பங்கு உண்டு என நினைத்தால் என் பதிவுக்கு அர்த்தம் உள்ளது என நினைக்கிறேன்.....







4 Responses
  1. 2070 ரொம்ப அதிகம்ணே!
    இன்னும் 10 20 வருசம் தான் அந்த காலத்துக்கு!


  2. Anonymous Says:

    ethu than naam aduthu varum santhathiku thra poram pola


  3. Arun Says:
    This comment has been removed by the author.

  4. Unknown Says:

    ஏனைய்யா இந்த அகாலைவெறி???
    என் பிஞ்சு மனசில பயத்த உண்டு பண்ணிற்றீங்களா பொஸ்....!!!

    ஆனா நல்லா இருக்கு சகோதரா...