ஆஸ்திரேலியா மண் கவ்வியது
அப்பாடா என் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது, ஒரு மாதிரி ஆஸ்திரேலியாவை அவங்க சொந்த மண்ணிலேயே தோற்கடித்தது தென்னாபிரிக்கா. அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட் தொடர் தோல்விகள், ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் கவசம் கீழே இறங்கி கொண்டிருக்கின்றது போலே தான் தெரிகிறது. சென்ற ஆண்டே இது நடந்திருக்கும் ஆஸ்திரேலியாவின் தகிடு தத்தம் மூலம் இலங்கை, இந்தியா அணிகள் அந்த தொடரை வெல்ல முடியாத மாதிரி செய்து விட்டார்கள். கடந்த போட்டியில் தென்னாபிரிக்கா போட்டியில் ஓட்ட எண்ணிகையை துரத்தியது போல இலங்கையும் துரத்தியது சங்ககார 200 ஓட்டங்களை நெருங்கினார், ஆனால் வழமை போல் நடுவரின் உதவியோடு 192 ஓட்டங்களுக்கு அவரை வெளியேற்றினர், இலங்கை அணி 410 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்து 96 ஓட்டங்கள் தோல்வி அடைந்தது, அடுத்த முறை இதே போல் சிக்கியது இந்தியா அணி முடிந்த அளவு கள்ள விளையாட்டு விளையாடி Andrew Symonds ஆகி அவுட் பல முறை விளையாடியது, கீழே விழுந்த பந்தை கேட்ச் எடுத்ததாக கூறியது, என ரொம்ப கீழ்த்தரமான விளையாட்டை விளையாடி போட்டியை வென்றது ஆஸ்திரேலியா அணி.
ஷேன் வார்னே மற்றும் மக்ராத் இல்லாத ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சு சும்மா நம்ம கிளப் போட்டிகள் அளவுக்கு தான் என இன்று தென்னாபிரிக்கா நிருபித்து உள்ளது, அதிலும் புதிதாக வந்த டும்னி சும்மா கலக்குறாரு ஐயா. அவரை மிட்சில் ஜோன்சன் எவ்வளவோ முறை வம்புக்கு இழுத்தும் மனுஷன் அசைந்து கொடுக்கவே இல்லை. ஆஸ்திரேலியா அணியில் பல மாற்றம் சீக்கிரம் நடக்கும் என எதிர் பார்க்கலாம், அவற்றில் சில
01 ஹய்டேன் ஒய்வு அல்லது கட்டாய ஓய்வு
02 Hussay அணியில் இருந்து தூக்கப்படல்
03 புதிய பந்து வீச்சாளர்கள் அணிக்குள் வருதல்
04 Brett Lee ஓரம் கட்டபடுதல்
* பின் குறிப்பு கட்டயமாக stayn அல்லது ntini அல்லது வேறு யாராவது ஒரு பந்து வீச்சாளர் பந்தை வீசி எறிவதாக குற்றச்சாட்டு, அல்லது இன வெறியை காட்டி ஆஸ்திரேலியரை திட்டினர் என தென்னாபிரிக்கா வீரர் ஒருவருக்கு குற்றச்சாட்டு, அல்லது பந்தை சேத படுத்தியதாக தென்னாபிரிக்கா அணி மீது புகார் என மேற்கூறியவற்றில் எதாவது அல்லது வேறு விதமாக எதையாவது எதிர் பார்க்கலாம். பார்ப்போம் என்ன விதத்தில் ஆஸ்திரேலியா பழி வாங்கும் என...........