A.R. ரஹ்மான் ஆஸ்கரை வெல்ல பிரார்த்திப்போம்


நம்ம A.R. ரஹ்மான் ஆஸ்கரை வென்று தமிழ் மக்களுக்கு புகழ் சேர்ப்பார் என பிரார்த்திப்போம் . எங்கு போனாலும் அங்கு உள்ளவர்களை எல்லாம் தன் இசையால் கட்டி போடும் A.R. ரஹ்மான் இப்போது அமெரிக்கர்களை ஈர்த்துள்ளார். இந்த வருடம் ஆஸ்கார் நிச்சயமாக A.R. ரஹ்மான் அவர்களுக்கு கிடைக்கும். அந்த ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்படும் பெப்ரவரி ௨௨ம் திகதியை ஆவலோடு எதிர் பார்த்திருக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்.

சிறந்த பாடல்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள 3 பாடல்களில் 2 நம்ம A.R. ரஹ்மான் அவர்களுடையது. மேலும் சிறந்த இசையமைப்புக்கும் உள்ள தெரிவுகளில் 1 அவருடையது. எனவே கட்டாயம் இம்முறை ஒரு ஆஸ்கார் விருதாவது நமக்கு கிடைக்கும் என நம்பலாம். இசையால் முடியாதது ஒன்றுமே இல்லை. யுத்தம் தீவிரவாதம் என உலகத்தில் எல்லா இடங்களிலும் பிரச்சனைகளில் உள்ள மக்களுக்கு நிம்மதியை தருவது இசை மட்டுமே அதை சிறப்பாக செய்யும் A.R. ரஹ்மான் நீடூழி வாழ பிராத்திப்போம்.

ஆனாலும் இன்னும் அவருக்கு வட இந்திய ஊடகங்கள் சரியான இடத்தை வழங்க வில்லை என தன் சொல்ல வேண்டும். காரணம் அவர் தமிழ் அக இருப்பதனால் இருக்கலாம். உதாரணம் சமீபத்தில் அமிதாப் ஆஸ்கார் பற்றி சொல்லி இருக்கும் கருத்துகள். அவர்கள் முகத்தில் எல்லாம் கறியை பூச நம்ம A.R. ரஹ்மான் பெப்ரவரி 22 ஆஸ்கார் வேண்டு வருவார், உலகையே தன் இசையால் வேண்டு வருவார் என பிரார்த்திப்போம்.